Sat. Apr 19th, 2025

தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் உச்சகட்ட கொதிநிலையில் இருக்கிறது. வாக்குப்பதிவுக்கு இன்னும் 5 நாட்களே உள்ள நிலையில், அதிமுக,திமுக உள்ளிட்ட கட்சித்தலைவர்கள் தங்கள் பிரசாரத்தை விரைவுப்படுத்தியுள்ளனர்.

தேர்தல் பரப்புரையில் தொடர்ந்து முனைப்புக் காட்டி வரும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, இன்று காலை கூடலூரில் தனது பிரசாரத்தை தொடங்குகிறார். அடுத்தடுத்து குன்னூர், உதகை, கோவை, ஈரோடு ஆகிய இடங்களில் அதிமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொள்ளும் முதல்வர், இன்றைய ஒருநாள் பரப்புரையை இரவு நாமக்கல்ல்லி நிறைவு செய்கிறார்.