Sat. Nov 23rd, 2024

இராயபுரம், பெரம்பூர், மாதவரம், திருவொற்றியூர், ஆர்.கே.நகர், துறைமுகம், எழும்பூர், திரு.வி.க.நகர்ஆகிய சட்டமன்றத் தொகுதி வேடபாளர்களை ஆதரித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ராயபுரத்தில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது’

கல்வி, வேலைவாய்ப்பில் மகளிருக்கு இதுவரை வழங்கப்பட்டு வரும் 30 சதவிகித ஒதுக்கீடு, மே 2 ஆம் தேதிக்குப் பிறகு 40 சதவிகிதமாக உயர்த்தி வழங்கப்படும். இளைஞர்களுக்கு 3 லட்சம் வேலைவாய்ப்பு உருவாக்கப்படும் என்றும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

திமுக ஆட்சிக்காலத்தில் இருந்த உணவுப் பொருள்களின் விலையையும், இன்றைய ஆட்சியில் உணவுப்பொருள்கள் எந்த அளவிற்கு உயர்ந்திருக்கிறது என்பதையும் ஒப்பிட்டு பேசிய மு.க.ஸ்டாலின், திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால், மீனவர்களின் பொருளாதாரத்தை மேம்படுத்த பல்வேறு திட்டங்களை செயல்படுத்த திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

பத்தாண்டு அதிமுக ஆட்சியில் பல்வேறு துறைகளில் வீழ்ந்து கிடக்கும் தமிழகத்தை மீண்டும் வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்வதற்கு 7 அம்ச தொலைநோக்குத் திட்டங்களை ஏற்கெனவே திமுக அறிவித்துள்ளதாகவும், அனைத்து தரப்பு மக்களுக்கும் பயனளிக்கும் வகையில் ஆட்சியை செயல்படுத்திய, தேர்தல் அறிக்கையில் அனைத்து விதமான அம்சங்களும் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் மு.க.ஸ்டாலின் நினைவுக்கூர்ந்து பேசினார்.