Fri. Nov 22nd, 2024

நடிகர் கார்த்திக், மூச்சுத் திணறல் காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக் பெற்று வருகிறார். தேர்தலுக்கு தேர்தல் தலையை காட்டும் இவர், ஆளும்கட்சியுடன்தான் எப்போதும் கூட்டணி அமைக்க மெனக்கெடுவார். அதுவும் குறிப்பாக அதிமுக என்றால் நடிகர் கார்த்திக்கு கல்யாண விருந்து போல..

இவ்வளவு ஆவேசமாக பேசின நடிகர் கார்த்திக், 2011 ஆம் ஆண்டு தேர்தலில் அதிமுக கூட்டணியில் சேர்வதாக அறிவித்துவிட்டு பின்னர் பின்வாங்கினார். அடுத்து 2016 ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலின்போதும் திமுக கூட்டணியில் இடம் பெறுவதற்காக பேச்சுவார்த்தை நடத்தியவர், கடைசி நிமிடத்தில் ஜகா வாங்கிவிட்டார். இப்போது, 2021 ஆம் ஆண்டு தேர்தலின் போதும் தலையை காட்டினார். நாடாளும் மக்கள் கட்சி என்பது, இன்றைக்கு மக்கள் உரிமை காக்கும் கட்சி என்ற பெயரில் கட்சி தொடங்கியிருப்பதாக கடந்த டிசம்பரில் நெல்லையில் அறிவித்த அவர், கட்சி கொடியையும் அறிமுகப்படுத்தினார்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் கார்த்திக், அதிமுக ஆட்சியையும் மத்திய பாஜக ஆட்சியையும் கடுமையாக விமர்சனம் செய்தார். கட்சி தொடங்கி 100 வது நாளை கடப்தற்குள மீண்டும் அந்தர்பல்டி அடித்து, அதிமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவிப்பதாக அறிக்கை வெளியிட்டார்.

பிரசாரத்திற்கு வருவார் என ஆவலுடன் எதிர்பார்த்த அவரது முன்னாள் கதாநாயகி குஷ்புக்கு அதிர்ச்சி கொடுக்கும் வகையில் உடல் நலம் குன்றிவிட்டதாக கூறி தனியார் மருத்துவமனையில் சென்று படுத்துக் கொண்டார் நடிகர் கார்த்திக்.

அவரது உடல் நிலை எப்படியிருக்கிறது என்று அவருக்கு நெருக்கமான கட்சி நிர்வாகிகளை கேட்டபோது, நீங்க வேற சார். ஒவ்வொரு தேர்தலின்போதும் ஏதாவது காமெடி பண்ணிக் கொண்டிருப்பதே அவரது வாடிக்கை. இந்த முறை அதிமுக.வுடன் கூட்டணி இல்லை என்றார். சரி, திமுக.வுடன் கூட்டணி அமைப்பார் என்று எதிர்பார்த்து காத்திருந்தோம். ஆனால், அவர் யாருடனாவது கூட்டணி குறித்து பேசினாரா என்றே தெரியவில்லை.. இல்லை ஆளும்கட்சி தரப்பில் இருந்து மிரட்டல் வந்ததா, எதிர்ககட்சியில் இருந்து மிரட்டல் வந்ததா தெரியவில்லை. மருத்துவமனையில் போய் படுத்துக் கொண்டார். மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவருவதாக வெளியாகியுள்ள அவரது புகைப்படங்களைப் பாருங்கள், மூச்சுத் திணறலால் பாதிக்கப்பட்டவராகவா நடிகர் கார்த்திக் தெரிகிறார் என அங்கலாயத்துக் கொண்டார்.

திரையில் மட்டுமல்ல, அரசியலிலும் நவரச நாயகன்தான் நடிகர் கார்த்திக்….