தமிழகத்தைச் சீரமைக்கும் தொலைநோக்குப் பார்வையுடனும் செயல்திட்டத்துடனும் கூடிய முழுமையான உண்மையான தேர்தல் அறிக்கையை உருவாக்கி வெளியிட்டிருக்கிறோம் என்று நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
கோவையில் இன்று நடைபெற்ற நிகழ்வில், மக்கள் நீதி மய்யத்தின் தேர்தல் அறிக்கையை கமல்ஹாசன் வெளியிட்டு பேசினார்.
தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள்:
தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் அப்துல் கலாம் தற்சார்பு கிராமங்கள் உருவாக்க திட்டம்
பெண்களுக்கு ஊதியம் என்பது வேலை வாய்ப்பை உருவாக்குவது; இலவசம் வழங்குவது அல்ல
ராணுவ வீரர்களுக்கான சலுகை விலை அங்காடி போல (கேண்டீன்) மக்கள் கேன்டீன் திட்டம் துவங்கப்படும். இங்கு தரமான பொருள்கள் நியாயமான விலையில் கிடைக்கும். .
அரசு சீருடைப் பணியில் 50 சதவிகிதம் பெண்களுக்கு பிரதிநிதித்துவம் கொடுக்கப்படும்
தமிழ்நாடு முழுவதும் நகரங்களில் கட்டமைப்பு வசதி மேம்படுத்தப்படும்
மருத்துவப்படிப்புக்கான ’நீட்’ நுழைவுத்தேர்வுக்கு பதிலாக மாநில அளவிலான நுழைவுத் தேர்வு நடத்தப்படும். இதில் மாநில பாடத்திட்டங்களில் இருந்து கேள்விகள் கேட்கப்படும்.
அனைத்து மாவட்டங்களிலும் மகளீர் வங்கிகள் உருவாக்கப்படும்
அனைத்து மாநகராட்சிகளிலும் ’மோனா ரயில்’ திட்டம் கொண்டுவரப்படும்
தமிழக அரசு பள்ளிகளை பன்னாட்டு தரத்தில் உயர்த்துவோம்.