Mon. Nov 25th, 2024

நடிகர் மன்சூர் அலிகான், திரைப்படங்களில் வில்லன் வேடம் போட்டு கொடுக்கும் தொல்லையை பொறுக்க முடியாமல் மக்கள் தவித்து வருகின்றனர். அதற்கு மேலாக இருக்கிறது நிஜ வாழ்க்கையில் அவர் செய்யும் தொந்தரவுகள்.

நடிகர் சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சியில் இருந்தபோது, அவர் அடித்த லூட்டிகளுக்கு, மிரட்டல்களுக்கு அளவே கிடையாது. வேறு வழியில்லாமல் அவரை கட்சியிலேயே வைத்திருந்தார் நடிகர் சீமான்.

சிறையில் இருந்து விடுதலையாகி சென்னை வந்த மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழி, வி.கே.சசிகலாவை சீமான் நேரில் சென்று சந்தித்தற்கு எதிர்ப்பு தெரிவித்து தனிக் கட்சி கண்டார் நடிகர் மன்சூர் அலிகான். அந்த கட்சியில் சேருவதற்கு சீமான் கட்சியில் இருந்து யாராவது விலகி வந்தால், அவர்களை அடிப்பேன், கொல்லுவேன் என உதார் விட்டார்.

இப்போது, அமைச்சர் எஸ்.பி.வேலுமணி போட்டியிடம் கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட நடிகர் மன்சூர் அலிகான் களம் இறங்கியுள்ளார். இதன் பின்னணி குறித்து கூட ஒரு தகவல் பரவி வருகிறது.

தனக்கு எதிராக போட்டியிடும் திமுக வேட்பாளருக்கு நெருக்கடி ஏற்படுத்தவும், திமுக.வுக்கு போகிற நடுநிலையாளர்கள் வாக்குகளை பிரிக்கவும், வேலுமணியால் களமிறக்கப்பட்டுள்ளவர் என்றுதான் நடிகர் மன்சூர் அலிகானுக்கு எதிராக குற்றம் சாட்டப்படுகிறது.

இந்தநிலையில், தொண்டாமுத்தூர் தொகுதியில் முகாமிட்டுள்ள நடிகர் மன்சூர் அலிகான், பேரூர் கோவில் முன்பு அமர்ந்து பிச்சை எடுத்துக் கொண்டிருப்பவர்களுடன் அவரும அமர்ந்து, கலாட்டா செய்து கொண்டிருக்கிறார். தெரு நாயை அரவணைத்த படி அவர் செய்யும் பிரச்சாரத்தை அவருடன் அமர்ந்திருப்பவர்களே, முகத்தை சுழித்துக் கொண்டுதான் பார்த்தனர். அப்படியென்றால், அந்த தொகுதி மக்களின் நிலையை எண்ணி பார்த்தால்… சகிக்கல…