நல்லரசு தமிழ் செய்திகள் இணையத்தளத்தில் நேற்று (பிப்.20) சேலம் மாவட்டத்தில் உள்ள வீரபாண்டி தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் மருத்துவர் தருணுக்கு சொந்தத்திலேயே ஏற்பட்டுள்ள நெருக்கடி குறித்து செய்தியை வெளியிட்டிருந்தோம். அந்த செய்தியின் அடிப்படையில், உண்மை நூறு சதவிகிதம் இருக்கிறது என்பதற்கு நற்சான்றிதழ் கொடுக்கும் வகையிலும், சேலத்தை தலைமையிடமாக கொண்டு இயங்கும் ஒரு காலத்தில் பரபரப்பு நாளிதழாக பெயர் பெற்ற அரசியல் சார்பற்ற காலைக்கதிர் நாளிதழில் இன்றைக்கு அந்த செய்தியை இன்னும் கூடுதலாக சுவாரஸ்யமாக மாற்றி பிரசுரித்து இருக்கிறது.
திமுக.வை தோற்கடிக்க பாரப்பட்டி அஸ்திரம் என்ற தலைப்பில் விரிவாக எழுதப்பட்டுள்ளது. நல்லரசு தமிழ் செய்திகளை அங்கீகரித்த, கட்சி சார்பற்ற நாளிதழின் அங்கீகாரத்தை சிரம் தாழ்ந்து வணங்கி ஏற்கிறோம்…