பத்மநாபபுரம், கிள்ளியூர், விளவங்கோடு ஆகிய சட்டமன்றத் தொகுதிகளில் திமுக மற்றும் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
ரூ.4000 கோடி டெண்டர் முறைகேடு வழக்கில் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் பழனிசாமி சிறைக்குச் செல்வார் என்று அக்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் ஆவேசமாக கூறியுள்ளார்.
அதிமுக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தனது உறவினருக்கு 4000 கோடி ரூபாய் மதிப்பிலான அளவுக்கு டெண்டர் ஒப்பந்தம் கொடுத்திருக்கிறார். இதற்கு என்ன பழனிசாமி ராமலிங்கம், எஸ்.பி.கே., பாலாஜி கம்பெனி ஆகிய நிறுவனங்களுக்கும் பழனிசாமிக்கும், அவரது மகன் மிதுனுக்கும் என்ன தொடர்பு, இதற்கு முதல்வர் பதில் சொல்வாரா உலக வங்கி நிதியுதவியில் நிறைவேற்றப்படும் திட்டங்களுக்கான டென்டர் வழங்கும் போது, பதவியில் உள்ள உறவினர்களுக்கு டென்டர் வழங்கக் கூடாது என்ற விதி இருக்கிறது பழனிசாமிக்கு தெரியுமா, தெரியாதா..
இந்த டென்டரை உறவினருக்கு வழங்கியதில் முறைகேடு இருப்பது பற்றி சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளதே? இதற்கு பதில் என்ன? உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்ட 4000 கோடி டென்டர் முறைகேடு வழக்கில் தனக்கு எதிரான விசாரணைக்கு தடை வாங்கினாரா?இல்லையா? இதற்கு பதில் சொல்வாரா? முதல்வர் பழனிசாமி, இவ்வளவு முறைகேடுகளை செய்த பிறகும் முதல்வர் பழனிசாமி இப்போது வெளியே இருக்கிறார். நிச்சயம் திமுக ஆட்சிக்கு வரப்போகிறது. இப்போது வெளியே இருக்கும் பழனிசாமி, மே 2 ஆம் தேதிக்குப் பிறகு உள்ளே தான் இருப்பார் .
இவ்வாறு மு.க.ஸ்டாலின் ஆவேசமாக கூறினார்.