ஊர்ந்து செல்ல நான் என்ன பல்லியா? பாம்பா? -என முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கிண்டலும் கேலியுமாக கலாய்த்து உள்ளார்
கடலூர் மாவட்டம் புவனகிரியில் முதலமைச்சர் பழனிசாமி பரப்புரை மேற்கொண்டார். அப்போது அவர், நான் ஊர்த்து போய் முதல்வர் பதவியை பெற்றதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கிண்டலடித்து வருகிறார். நான் என்ன, பல்லியா? பாம்பா?
ஊர்ந்து போய் முதல்மைச்சர் பதவி ஏற்க? அவர் உள்மனதில் உள்ள எரிச்சலை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார். எதிர்க்கட்சித் தலைவராக இருப்பவருக்கு முதலமைச்சரை எப்படி பேச வேண்டும் என்று நாகரிகம் கூட தெரியவில்லை. அவருடைய கனவு கலைந்து போனதால், ஆத்திரத்தோடு பேசுகிறார்.
அம்மா இறந்துட்டாங்க. இனிமே ஆட்சியும், கட்சியும் இருக்காது என்று நினைத்தார்.இப்படியொரு விவசாயி வருவான் என்று அவர் எதிர்பார்க்கவில்லை. கடவுளின் ஆசியோடும், மக்களின் அருளாசியுடனும் தான் முதலமைச்சராக பதவியேற்றுக் கொண்டேன்.
நான் நடந்து சென்றுதான் முதல்வரானேன். விவசாயிகள் கஷ்டத்தை நான் உணர்ந்தவன். வெயில், மழை, இரவு, பகல் என எதையும் பார்க்காமல் ரத்தம் வியர்வை சிந்தி உழைக்கும் ஒரே தொழில் விவசாயம். இதைப்பற்றி ஸ்டாலினுக்கு சிந்திக்க தெரியாது. சிந்தித்தாலும் பேசத் தெரியாது. என் தாத்தா காலத்தில் இருந்து விவசாயம் தான் செய்துகொண்டிருக்கிறோம்.
அதிமுக அரசு என்றும் விவசாயிகளின் தோழனாக இருந்துள்ளது. விவசாய நிலங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்திற்க்கு அனுமதி வழங்கியவர் ஸ்டாலின். ஆனால் காவிரி டெல்டாவை வேளாண் பாதுகாப்பு மண்டலமாக அறிவித்தது எனது தலைமையிலான அம்மாவின் அரசு.
இவ்வாறு முதல்வர் இ.பி.எஸ். பேசினார்.