தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் தொகுதியில் துணை முதல்வரும் அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் போட்டியிடுகிறார்..அவரை எதிர்த்து அதிமுக முன்னாள் எம்எல்ஏ.வும் தற்போதைய திமுக மாவட்ட பொறுப்பாளருமான தங்கதமிழ்ச்செல்வன் களம் காண்கிறார்.. குரு – சிஷ்யன் என்ற உறவில் பழகிய இருவரும் ஒருவரை எதிர்த்து ஒருவர் போட்டியிடுவதால் கொதி நிலையில் இருக்கிறது போடி தொகுதி..அந்த தொகுதியில் பெரும்பான்மையாக உள்ள சமுதாய வாக்குகளை இருவரும் குறி வைத்துள்ள நிலையில், அடுத்தடுத்துள்ள நிலையில் உள்ள சமுதாய மக்களின் வாக்குகள் யாருக்கு கிடைக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது..ஓ.பி.எஸ்.தேர்தல் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில் அவரது இரு மகன்களும் ரவீந்திர நாத் எம்.பி இளைய மகன் ஜெய பிரதீப் ஆகியோர் தொகுதி முழுவதும் ஊர் ஊராக சுற்றி வந்து வாக்கு சேகரிப்பில் முனைப்பு காட்டி வருகின்றனர்..
இந்நிலையில், வெள்ளிக்கிழமையான இன்று போடி உள்ளிட்ட பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகை நடைபெற்றது..பின்னர் பாஜக கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சி களுக்கு வாக்களிக்க வேண்டாம் என ஜமாஅத் சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது..இந்த தகவலை அறிந்து ஓ.பி.எஸ்.ஸின் இரண்டு புதல்வர் களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்…