அதிமுக தேர்தல் அறிக்கையை முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் இன்று சென்னையில் வெளியிட்டனர். அதில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள்….
கல்லூரி மாணவர்களுக்கு ஆண்டு முழுவதும் 2 ஜி.பி டேட்டா.
அம்மா இல்லம் என்ற பெயரில் ஏழைகளுக்கு வீடு.
ரேசன் பொருட்கள் வீடு தேடி வரும் திட்டம் அமல்படுத்தப்படும்.
வீடுகளுக்கு ஆண்டிற்கு 6 விலையில்லா கேஸ் சிலிண்டர்.
அம்மா வாஷிங்மெஷின் வழங்கும் திட்டம்.
கல்விக் கடன் தள்ளுபடி –
ஆட்டோ ஓட்டுநர்களுக்கு, ரூ.25,000 மானியத்தில் பசுமை ஆட்டோ திட்டம்.
கல்வியை மாநிலப் பட்டியலில் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும்.
கண்ணியமிகு காயிதே மில்லத் பெயரில் இஸ்லாமிய பல்கலைக்கழகம் –
100 நாட்கள் வேலை, 150 பணி நாட்களாக உயர்த்தப்படும்
மாதந்தோறும் மின் பயனீட்டு கணக்கீடு நடைமுறை அமல்.
மகப்பேறு விடுப்பு காலம் ஒரு வருடமாக உயர்த்தப்படும்.
பொங்கல் பண்டிகை உதவித்தொகை தொடரும் –
நகரப் பேருந்துகளில் பயணம் செய்யும் மகளிருக்கு 50% கட்டணச் சலுகை.
அனைத்து ரேசன் அட்டைதாரர்களுக்கும் சோலார் சமையல் அடுப்பு வழங்கப்படும்.
அனைத்து ரேசன் அட்டைதாரர்களுக்கும் விலையில்லா அம்மா வாஷிங்மெசின் வழங்கப்படும்.
கரிசல் மண், களிமண் எடுக்க தடையில்லா அனுமதி-
அனைத்து மாவட்டங்களிலும் சிறிய தொழில்நுட்ப பூங்காக்கள் அமைக்கப்படும்.
தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களில் பத்திரிகையாளர் குடியிருப்பு கட்ட இடம் வழங்கப்படும்.
ஜாதிவாரி கணக்கெடுப்பு அடிப்படையில் அனைத்து ஜாதியினருக்கும் உரிய இடஒதுக்கீடு.
நெசவாளர்களுக்கு ரூ.1 லட்சம் வரை கடனுதவி வழங்கப்படும்.
மகளிர் சுய உதவிக்குழுக்களுக்குத் தேவையான கடன் உதவி வழங்கப்படும்.
கோதாவரி-காவேரி இணைப்புத் திட்டத்தை மேற்கொள்ள தீவிர நடவடிக்கை.
கட்டணம் இல்லாமல் லைசன்ஸ் மற்றும் ஓட்டுனர் பயிற்சி.
வெளிநாடு வாழ் தமிழர்களுக்கு தனிதுறை.
மாவட்டம் தோறும் சிப்காட் தொழில் வளாகம் அமைக்கப்படும்.
இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை.
வேலையில்லா இளைஞருக்கு ஊக்கத்தொகை இரட்டிப்பாக வழங்கப்படும்.
அமைப்பு சாரா ஓட்டுனர்களுக்கு விபத்து காப்பீடு.
மதுபானக்கடைகள் படிப்படியாக மூடப்படும்.
CAA சட்டத்தை கைவிட வலியுறுத்தப்படும்.
100 நாட்கள் வேலை திட்டம் 150 நாட்களாக உயர்த்தப்படும்.
தனியார் பங்களிப்புடன் தொடக்கப் பள்ளி குழந்தைகளுக்கு காலை டிபன் வழங்கப்படும்.
ஏழை திருமண தம்பதிகளுக்கு சீர்வரிசை வழங்கப்படும்-
பொங்கல் பண்டிகைக்காக உதவித்தொகை திட்டம் தொடரும்.
மதுரை விமான நிலையத்திற்கு பசும்பொன் முத்துராமலிங்கம் அவர்களின் பெயர் சூட்டப்படும்.
புற்றுநோய் சிகிச்சைக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் –
அரசு பள்ளி சுயநிதி வகுப்பு மாணவர்களுக்கும் இலவச மடிக்கணினி வழங்கப்படும்.
அங்கன்வாடி குழந்தைகளுக்கும், பள்ளி மாணவர்களுக்கும் தினந்தோறும் 200 மி.லி பால்.