Sun. Nov 24th, 2024

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் (எஸ்.டி.) தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினராக சி.சந்திரசேகரன் உள்ளார். சிட்டிங் எம்.எல்.ஏ.வான இவருக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு அளிக்காமல், சந்திரன் என்பவரை வேட்பாளராக அதிமுக தலைமை அறிவித்தது.

இதனால், கடும் அதிருப்தியடைந்த அதிமுக எம்.எல்ஏ. சந்திரசேகரன, நேற்று இரவில் இருந்து தொடர்ந்து தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தி வந்தார். இன்று காலை செய்தியாளர்களைச் சந்தித்த அவர், அமைச்சர் பி.தங்கமணிக்கு எதிராக கடுமையான குற்றச்சாட்டுகளை ஆவேசமாக அடுக்கினார்.

அவர் அளித்த பேட்டியின் சுருக்கம். அதிமுக தலைமைக்கு 3 நாள் கெடு விதிக்கிறேன். மீண்டும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படாவிட்டால் சுயேட்சையாக போட்டியிடுவேன்.

எனக்கு சீட் மறுக்கப்பட்டதற்கு அமைச்சர் பி.தங்கமணியின் சர்வாதிகார போக்குதான் காரணம்.

இவ்வாறு சந்திரசேகரன் எம்.எல்.ஏ கூறினார்.

இதனிடையே, சேந்தமங்கலம் தொகுதியில் அதிமுக எம்.எல்.ஏ. சந்திரசேகரனுக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்க வேண்டும் என வலியுறுத்தி கொல்லிமலை செம்மேடு வல்வில் ஒரி சிலை முன்பாக எம்எல்ஏ.,ஆதரவாளர்கள் 200-க்கும் மேற்பட்டோர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.