ஏற்காட்டில் அதிமுக வேட்பாளராக மீண்டும் சித்ரா எம்.எல்.ஏ அறிவிக்கப்பட்டார். பழங்குடியினத்தைச் சேர்ந்த அவர், ஐந்தாண்டுகள்க பதவியில் இருந்தும் பொதுமக்களின் அடிப்படை, அத்தியாவசியமான கோரிக்கைகளைக் கூட நிறைவேற்றாததால், ஏற்காடு அதிமுக.வினரே எம்.எல்.ஏ. சித்ரா மீது அதிருப்தியில் உள்ளனர்.
மீண்டும் ச்த்ராவே, ஏற்காடு தொகுதியில் போட்டியிடுவார் என்று அதிமுக தலைமை நேற்று அறிவித்த நேரம் முதல், ஏற்காடு தொகுதி முழுவதும் அதிமுக நிர்வாகிகள் விரக்தியில் உள்ளனர். இந்நிலையில், அவர்களின் மனக் கொந்தளிப்பை அதிகரிக்கும் வகையில், அடிப்படை வசதிகளை கேட்டு முழக்கமிட்ட பழங்குடியின மக்களை, சித்ரா எம்.எல்.ஏ.வும் அவரது ஆதரவாளர்களும் மிரட்டிய நிகழ்வைப் பார்த்து, அதிமுக நிர்வாகிகள் கொந்தளிக்க தொடங்கி விட்டனர்.
ஏற்காட்டில் உள்ள அதிமுகவினர் இன்று ஏற்காட்டின் இதயப் பகுதியான அண்ணா சிலை அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அடிப்படை வசதிகளை செய்து தராத எம்.எல்.ஏ. சித்ராவைக் கண்டித்து அவர்கள் முழக்கமிட்டனர். தகவல் அறிந்து அங்கு வந்த MLA சித்ரா மற்றும் கட்சி நிர்வாகிகள், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பெண்களிடம் குறைகளை கேட்காமல், அவர்களை மிரட்டிய நிகழ்வு, அதிமுக.வினர் மற்றும் பொதுமக்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் அதிமுக எம்.எல்.ஏ.வும் அவரது ஆதரவாளர்களும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், அசம்பாவித சம்பவம் ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சத்தில், காவல்துறையினரும் அங்கு விரைந்து வந்தனர்.
இதன் பிறகே, எம்.எல்.ஏ. சித்ராவும் அவரது ஆதரவாளர்களும் சமாதானம் பேசுவதுப் போல உயர்த்திய குரலை, சற்று குறைத்து இறங்கி வந்தனர்.
மீண்டும் தேர்தலில் வெற்றி எம்.எல்.ஏ. ஆனவுடன் உங்கள் கோரிக்கையை நிறைவேற்றுவதாக சித்ரா உறுதியளித்த பின்பே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அதிமுக.வினர் கலைந்து சென்றனர்.
சித்ரா எம்.எல்.ஏ.வுக்கு எதிராக அவரது சொந்தக் கட்சியைச் சேர்ந்த அதிமுக.வினரே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதும், அவர்களை எம்.எல்.ஏ. சித்ரா மிரட்டியதும் கண்டு, உள்ளூர் திமுக.வினர் கொண்டாட்ட மனநிலையில் இருக்கிறார்கள்.
கடந்த ஐந்தாண்டுகளில் ஏற்காடு தொகுதிக்கு ஒன்றுமே செய்யாத சித்ரா எம்.எல்.ஏ., கூவத்தூர் முகாம் மூலம் கிடைத்த பலனைக் கூட சொந்த பயன்பாட்டிற்கே வைத்துக் கொண்டதால், ஏற்காடு தொகுதி ஒட்டுமொத்த அதிமுக.வும் சித்ராவுக்கு எதிரான மனநிலையில் இருக்கிறார்கள் என்று கூறும் திமுக.வினர், வரும் தேர்தலில் சித்ராவுக்கு எதிராக உள்ளடி வேலைபார்க்கும் அதிமுக.வினரால், திமுக.வின் வெற்றி எளிதாகி விடும் என் உற்சாகமாக குரல் கொடுக்கிறார்கள்.
சித்ராவிற்கு எதிரான ஆட்டம் இப்பதானே ஆரம்பிச்சிருக்கு… தேர்தல் நெருங்க, நெருங்க சூடு பிடிக்கும். பொறுத்திருங்கள் என்கிறார்கள் ஏற்காடு திமுக நிர்வாகிகள் மகிழ்ச்சிப் பொங்க….