Sat. Nov 23rd, 2024

ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெற உள்ள சட்டமன்றப் பொதுத்தேர்தலில்,  திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் ஆகியோருக்கு இடையே தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நிறைவடைந்தது.

கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி, தமிழகத்தில்   3 (மூன்று) சட்டமன்றத் தொகுதிகளை பங்கிட்டுக் கொள்வதெனவும், உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவதெனவும் இருகட்சிகளிடையே முடிவு செய்யப்பட்டது. இந்த பேச்சு வார்த்தையின்போது கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியின் பேரவைத் தலைவர் ஆர்.தேவராஜன்-திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு,  முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, எம்.எல்.ஏ., துணைப் பொதுச்செயலாளர்கள் இ.பெரியசாமி, எம்.எல்.ஏ., க.பொன்முடி, எம்.எல்.ஏ., சுப்புலட்சுமி ஜெகதீசன், கழக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, எம்.பி.,  உயர்நிலை செயல் திட்டக்குழு உறுப்பினர் எ.வ.வேலு, எம்.எல்.ஏ., ஆகியோர் உடனிருந்தனர்.