Sat. Nov 23rd, 2024

அதிமுக கூட்டணியில், தேமுதிக கேட்ட தொகுதிகளை வழங்குவதில் தொடர்ந்து சிக்கல் நிலவி வந்த நிலையில், அக்கட்சித் தலைவர் விஜயகாந்த் தலைமையில் மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் இன்று காலை கோயம்பேட்டில் உள்ள அக்கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில், அதிமுக கூட்டணியில் இருந்து விலகுவது என தேமுதிக ஒருமனதாக முடிவுவெடுத்துள்ளதாக, விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை……

ஏற்கெனவே, அதிமுக கூட்டணியில் இருந்து விலகிவிட்டதாக, முக்குலத்தோர் புலிப்படை கட்சி தலைவர் நடிகர் கருணாஸ் எம்.எல்.ஏ., அறிவித்துள்ளார். திமுக.வுக்கு ஆதரவு தெரிவித்துள்ள அவர், அதிமுக.வை எதிர்த்து 234 தொகுதிகளிலும் பிரச்சாரம் செய்வேன் என அறிவித்துள்ளார்.

இதேபோல, அதிமுக கூட்டணியில் இருந்து மற்றொரு கட்சியான, மனிதநேய ஜனநாயக கட்சியும் திமுக பக்கம் சாய்ந்துள்ளது. அக்கட்சியின் தலைவர் தமிமூன் அன்சாரி எம்.எல்.ஏ., பாஜக.வுடன் அதிமுக கூட்டணி அமைத்தற்கு எதிர்ப்பு தெரிவித்து, அக்கூட்டணியில் இருந்து விலகுவதாக தெரிவித்தார்.

கடந்த சில நாள்களில் மூன்று கட்சிகள் அதிமுக கூட்டணியில் இருந்து விலகியுள்ள நிலையில், மாற்றுப்பாதையை நோக்கிய பயணத்திற்கு முதன் முதலில் பிள்ளையார் சுழி போட்டவர் நடிகர் சரத்குமார்தான்.

தேர்தல் நெருங்கும் வேளையில் ஒரு கூட்டணியில் இருந்து ஒரு சில கட்சிகள் விலகும் முடிவை எடுத்தால், அந்த கூட்டணிக்கு தலைமை வகிக்கும் கட்சி மீது கூட்டணி கட்சிகள் நம்பிக்கை இழந்துவிட்டது என்றுதான் அர்த்தமாகும். அதன் அடிப்படையில், அதிமுக.வுக்கு வெற்றி வாய்ப்பு குறைவு என்று கருதி தேமுதிக, புலிப்படை, ம.ஐ.க. நடிகர் சரத்குமார் ஆகிய கட்சிகளின் விலகியுள்ளதாக தேர்தல் அரசியல் ஆய்வாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.