Sun. Apr 20th, 2025

சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பாமக தேர்தல் அறிக்கை இன்று வெளியிடப்பட்டது:

சென்னையில் அக்கட்சியின் தலைவர் ஜி.கே.மணி, பாமக.வின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். அதில் இடம் பெற்றுள்ள முக்கிய வாக்குறுதிகள்……

பாமக நிறுவனர் ராமதாஸ், இளைஞரணி தலைவர் அன்புமணி ஆகியோர் தேர்தல் அறிக்கையை வெளியிட்டனர்.

12ஆம் வகுப்பு வரை இலவச கல்வி வழங்கப்படும்.

தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு
கல்வி கட்டணத்தை அரசே செலுத்தும்.

பொதுத்துறை வங்கிகளில் மாணவர்கள் பெற்ற கல்வி கடனை அரசே செலுத்தும் – பாமக தேர்தல் அறிக்கை.

இடைநிற்றலை தடுக்க 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மாதம் ரூ.500 நிதியுதவி.

11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மாதம் ரூ.1000 நிதியுதவி.