Sat. Nov 23rd, 2024

அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் சென்னையில் இன்று காலை 10 மணியளவில், முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார்.

15 பேர் கொண்ட அந்த வேட்பாளர்கள் பட்டியலில் தலைமைக் கழக நிர்வாகிகள், எம்.எல்.ஏ., பதவியிழந்தவர்களின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன. ஆனால், டிடிவி.தினகரனின் பெயர் வேட்பாளர் பட்டியலில் இடம் பெறவில்லை.

எஸ். அன்பழகன். துணைத் தலைவர் ( ராசிபுரம் தனி தொகுதி)

முன்னாள் அமைச்சர் பழனியப்பன் ( பாப்பிரெட்டி பட்டி)

ரங்கசாமி. துணைப் பொதுச் செயலாளர் (பாபநாசம்)

செந்தமிழன் முன்னாள் அமைச்சர் (சைதாப்பேட்டை )

ஆர். மனோகரன். பொருளாளர் ( ஸ்ரீரங்கம்)

சண்முக வேலு தலைமை நிலையச் செயலாளர்( மடத்துக்குளம்)

கே.கே. உமாதேவன். தலைமை நிலையச் செயலாளர் (திருப்பத்தூர்-சிவகங்கை மாவட்டம்)

என்.ஜி.பார்த்திபன்,(சோளிங்கர்)

எஸ்.கே. செல்வம், (வீரபாண்டி)

ஐ. மகேந்திரன். (உசிலம்பட்டி)

ஆர். துரைசாமி (எ) சேலஞ்சர் துரை,(கோவை தெற்கு)

ஆர்.ஆர். முருகன் (அரூர்)

சுகுமார், (பொள்ளாச்சி)

டி.கே. ராஜேந்திரன். (தர்மபுரி)

பாலமுருகன்( புவனகிரி)

வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட பின்னர், செய்தியாளர்களிடம் டிடிவி தினகரன் பேசினார்.

கூட்டணி தொடர்பாக பல கட்சிகளுடன் பேசி வருவதாகவும், அவை உறுதியானவுடன் வெளிப்படையாக தெரிவிப்போம்.

தமிழகம் கடனில் தத்தளித்துக் கொண்டிருக்கிறதே தவிர வெற்றி நடையெல்லாம் போடவில்லை என்றும் ஏமாற்று வாக்குறுதிகளை நம்பியெல்லாம் மக்கள் ஆதரவு தரமாட்டார்கள் என்றும் கூறிய அவர், அதிமுக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை மறைமுகமாக தாக்கினார்.

தேர்தல் அறிக்கை வரும் 12 ஆம் தேதி சென்னையில் நடைபெறும் அமமுக பொதுக்கூட்டத்தில் வெளியிடப்படவுள்ளது. அதன் பிறகு அமமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியல் வெளியிடப்படும் என்றும் டிடிவி தினகரன் தெரிவித்தார்.