திருச்சியில் களை கட்டியுள்ளது, விடியலுக்கான முழக்கம் எனும் பெயரிலான திமு.க. பொதுக்கூட்டத்தை தொடங்கி வைத்தார், மு.க. ஸ்டாலின்.
பொதுக்கூட்ட வளாகத்தில் 90 அடியில் அமைக்கப்பட்டிருந்த மிக உயரமான திமுக கொடிக் கம்பத்தில் இருவண்ண கொடியை அக்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், ஏற்றி வைத்தார்.
இதனைத்தொடர்ந்து, திமுக முன்னணி நிர்வாகிகள் பங்கேற்ற பல்வேறு தலைப்பிலான கருத்தரங்கள் நடைபெற்று வருகிறது. நாள் முழுவதிலுமான பொதுக் கூட்ட விழாவில் பல்லாயிரக்கணக்கான திமுக தொண்டர்கள் பங்கேற்றுள்ளனர்.
மாலை 6 மணியளவில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், மேடைக்கு வந்தார். தொடர்ந்து முன்னணி தலைவர்கள் வருகை தந்து, உரையாற்றி வருகின்றனர்.
விடியலுக்கான முழக்கம் என்ற சிறப்பு பொதுக்கூட்டத்தின் தொடக்க நிகழ்ச்சியாக கட்சிக் கொடியை ஏற்றினார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.
இதனிடையே, சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவு அளிப்பதாக இந்திய தவ்ஹித் ஜமாத் தலைவர் எஸ்.எம்.பாக்கர் அறிவித்துள்ளார்.
சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவு அளிப்பதாக இந்திய தவ்ஹித் ஜமாத் தலைவர் எஸ்.எம்.பாக்கர் அறிவித்துள்ளார்.
சென்னையில் நடைபெற்ற இந்திய தவ்ஹித் ஜமாத் மாநில செயற்குழு கூட்டத்தில் திமுக கூட்டணிக்கு ஆதரவு அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
திமுக வெற்றி பெற தமிழகம் முழுவதும் ஐ.என்.டி.ஜே மாநில, மாவட்ட, கிளை நிர்வாகிகள் தொடர் பிரச்சாரம் செய்ய முடிவு செய்துள்ளனர்