அதிமுக கூட்டணியில் பாஜக.வுக்கு 20 எம்.எல்.ஏ தொகுதிகளும் வசந்த் அன் கே உரிமையாளர் வசந்தகுமார் மறைவால் காலியாக உள்ள கன்னியாகுமரி எம்.பி தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளது..இருகட்சிகளுக்கு இடையேயான தொகுதி பங்கீட்டில் அதிமுக சார்பில் ஓபிஎஸ்,இபிஎஸ்.ஸும் பாஜக சார்பில் சிடி.ரவியும் எல்.முருகனும் கையெழுத்திட்டுள்ளனர்..
பாஜக.வுக்கு பாமக.வை விட குறைவான தொகுதிகள்தான் அதிமுக ஒதுக்கும்..15 + அதற்கு மேலாக சில ஒதுக்கப்படும் அதுவும் அமித்ஷா அழுத்தத்தை ஏற்று என்று நல்லரசு அறுதியிட்டு கூறியிருந்தது..ஆனால் பிரபல நாளிதழ்கள் (தமிழ் &. ஆங்கிலம்) அமித்ஷா – மோடி ஆகியோரின் மிரட்டலுக்கு பயந்து 30 தொகுதிகளுக்கு மேல் வழங்கப்படும் என தவறான தகவலை பரப்பினார்கள்..வார இதழ்கள் கூட அமித்ஷாவின் நள்ளிரவு பேச்சுவார்த்தை எடப்பாடியாரை மிரட்டும் வகையில் தான் இருந்தது என்று கதை எழழுதின..ஆனால் மத்திய அரசை கண்டு அஞ்சுபவன் தான் அல்ல என்று எடப்பாடியார் தற்போது தொகுதி ஒதுக்கீட்டின் மேல் நிரூபித்து இருக்கிறார்..இதுபோல தான் கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தலின்போதும் பாஜக. வுக்கு 10 தொகுதிகளுக்கு மேல் அதிமுக ஒதுக்கும் என அனைத்து. அச்சு + காட்சி ஊடகங்கள் ஆரூடம் சொல்லின..ஆனால் அனைவரின் அரசியல் புலனாய்வையும் பொய்யாக்கும் விதமாக 5தொகுதிகள் மட்டுமே ஒதுக்கி கெத்து காட்டினார் எடப்பாடியார்..
தேவையற்ற சுமைதான் பாஜக என தெரிந்திருந்தும் வேறு வழியின்றி சுமக்க வேண்டிய நிலையில் இருக்கிறது அதிமுக.. சிறுபான்மை யினர் ஓட்டு திமுக கூட்டணிக்கு ஒட்டுமொத்த மாக சென்று விடும் என்பதால் இந்து ஆதரவு வாக்குகளை குறி வைத்து அக்னி பரிட்சை யில் குதிக்கிறது அதிமுக..
தொகுதி பங்கீட்டின் போது, இரண்டு கட்சித் தலைவர்களும் இணைந்து ஊடகங்களை சந்திப்பார்கள். ஆனால், பாஜக.வுக்கு தொகுதிகள் ஒதுக்கி வழங்கப்பட்டபோது, இரண்டு கட்சித்தலைவர்களும் சந்திக்கவில்லை. இணைய தளம் மூலமாக ஒப்பந்தத்தில் இரண்டு கட்சித்தலைவர்களும் கையெழுத்திட்டுள்ள நிலையில், தொகுதி பங்கீடு விவகாரத்தில் முழுதிருப்தி தமிழக பாஜக தலைவர்களுக்கு இல்லை என்பது வெட்ட வெளிச்சமாகியுள்ளது.
மத்தியில் உள்ள பாஜக அரசை வைத்து, தமிழகத்தில் அதிமுக ஆட்சியை மிரட்டி, அதிக தொகுதிகளை பெற்றுவிடலாம் என தமிழக பாஜக தலைவர்கள் காய் நகர்த்தி வந்தனர். அவர்களின் முயற்சிக்கு முட்டுக்கட்டைப் போட்டுவிட்டனர் ஓ.பி.எஸ்.ஸும், இ.பி.எஸ்.ஸும்.
இதேபோல, அமமுக.வையும் அதிமுக கூட்டணிக்குள் கொண்டு வர தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் மிகவும் மெனக்கெட்டார். அந்த முயற்சிக்கும் செக் வைத்துவிட்டார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. கூட்டணிக்குள்ளேயே எண்ணெய்யும் தண்ணீராக உள்ள அதிமுக பாஜக கூட்டணியை வாக்காளர்கள் எப்படி மதிப்பீடுவார்கள்?
தீர்ப்பு மக்கள் கையில் உள்ளது…