கொரோனோ தொற்று காலத்திலும் கொண்டாட்டமாக இருந்த ஒரே சமூகம் திரையுலக பிரபலங்கள்.. தனித்து இரு என்று சொன்னது, அவர்கள் காதுகளில் தள்ளாடிக் கொண்டே இரு என்று விழுந்திருக்கும் போல…
பண்ணை வீடுகளில் முகாமிட்டு, முடித்த வரை கொண்டாடி தீர்த்திருக்காங்க.. கொரோனோ அச்சம் அகன்ற பிறகு அங்கொன்றும் இங்கொன்னுமாக சூட்டிங் ஆரம்பித்த பிறகும் வார விடுமுறை நாட்களில், குடியும் குத்து டான்ஸ் என கும்மாளமாக இருப்பது வாடிக்கையாகிவிட்டது.
அதுவும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மருமகன் தனுஷ், போதை உச்சிக்கு போய்விட்டால், அவர் செய்யும் ரகளை அதகளமாக இருக்குமாம். ஏற்கெனவே, அவரின் வண்டவாளங்களை பின்னணி பாடகி ஒருவர் அம்பலத்தியிருக்கிறார்.
இதற்கு பிறகும் ஆட்டத்தை குறைக்காத தனுஷ், சக நடிகரான ரவியின் மனைவியோடு குடிபோதையில் சண்டை போட்டுள்ளது, இப்போது அம்பலத்திற்கு வந்துவிட்டது.
நடிகர் ஜெயம் ரவி, தனது மனைவி ஆர்த்தியுடன் நட்சத்திர விடுதியில் நடந்த பார்ட்டிக்கு சென்றுள்ளார். அங்கு நடிகர் தனுஷ், நடிகை த்ரிஷா உள்ளிட்டோர் இருந்துள்ளனர். சோம பானத்தை எல்லோரும் பருகியுள்ளனர்.
மது மயக்கம் அதிகமான நிலையில், தனுஷ் தன்னிலை மறந்து, ஜெயம் ரவி மனைவியிடம் தரக்குறைவாக நடந்து கொண்டுள்ளார். தன் கண் முன்பே தனது மனைவியிடம் தகராறு செய்யும் தனுஷின் நடவடிக்கைகளை பார்த்து, ரவி, தலையில் கையை வைத்துக் கொண்டு கையறு நிலையில் நின்றுக் கொண்டிருக்கிறார். தனுஷின் தப்பாட்டம் எல்லை மீறி போவதைக் கண்டு பொறுக்க முடியாமல், அவரை த்ரிஷா கண்கள் சிவக்க முறைக்கிறார்.
இந்த அற்புத காட்சிகளை எந்த புண்ணியவானோ போட்டோ எடுத்து சமூக ஊடகங்களில் பரப்பி விட்டார். இன்றைய நேரத்தில் பிச்சுக்கிட்டு போகுது இந்த புகைப்படங்கள்…