Sun. Nov 24th, 2024

பிப்ரவரி 24 ம் தேதி மறைந்த முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டார் வி.கே.சசிகலா.. அ.தி.மு.க லெட்டர் பேடில் பொதுச்செயலாளர் என்றே அவர் தன்னை விளித்து கையெழுத்திட்டு இருந்தார்..அன்றைய தினத்தில் இருந்து மார்ச் 3 ஆம் தேதிக்குள் க அதாவது 8 நாட்களுக்குள் அரசியலில் இருந்து முழுவதுமாக விலகும் அளவுக்கு அவரை துரத்திய நிகழ்வுகளின் பின்னணி என்ன என்று கேள்வி எழுப்புகிறார்கள் அவரின் கடந்த கால அரசியலை நன்கு அறிந்தவர்கள்..

மேலும் அதிமுக.வின் பொதுச் செயலாளர் தான் தான் என்று உரிமை கொண்டாடும் வழக்கையும் துரிதப்படுத்த அவரது தரப்பில் இருந்தே முயற்சி யும் சசிகலா சென்னை திரும்பிய பிறகும் முன்னெடுக்கப்பட்டது..

அரசியலில் இருந்து விலகும் முடிவை சசிகலா மனப்பூர்வமாக எடுத்திருக்கமாட்டார்..சிறையில் இருந்து வெளியே வந்த பிறகு அவர் எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை என்பதால் மனம் வெறுத்து இந்த முடிவை எடுத்திருக்கிறார் என்கிறார்கள் முதல்வர் இபிஎஸ்.ஸின் நெருங்கிய சகாக்கள்..

பிரதமர் மோடி,உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் தமிழக பாஜக தலைவர்கள் சசிகலாவை அதிமுக. வில் இணைத்து கொண்டால் வரும் தேர்தலில் அக்கட்சியின் செல்வாக்கு அதிகரிக்கும் என்று வலியுறுத்திய போதும் மு முதல்வர் இபிஎஸ் மனமிரங்கவில்லை..தனது தலைமையில் தான் அதிமுக தேர்தலை சந்திக்க வேண்டும் என்ற முடிவில் உறுதியாக இருந்தார்.. சசிகலாவை அதிமுக. வில் சேர்க்க வேண்டும் என்று ஓபிஎஸ்.ஸும் அழுத்தமாக குரல் கொடுக்கவில்லை..இந்த விவகாரம் கடந்த ஒருவாரமாக அதிமுக.விற்குள்ளும் வெளி தளத்திலும் சூடாக விவாதிக்கப்பட்டு வந்த நிலையில் சசிகலாவுக்கு ஆதரவாக அதிமுக நிர்வாகிகள் ஒருவர் கூட வெளிப்படையாக குரல் கொடுக்கவில்லை..அவரை நேரடியாக சந்தித்து ஆதரவு தெரிவிக்கவும் முன்வரவில்லை…23 நாட்களாக சென்னையிவேயே தங்கியிருந்த போதும் அவரால் அரசியலுக்கு அழைத்து வரப்பட்டு அடையாளம் காட்டப்பட்டவர்கள் கூட சசிகலாவுக்கு ஆதரவாக குரல் கொடுக்க தைரியமாக முன்வரவில்லை.. கடந்த ஒருவாரமாக சசிகலாவை மீண்டும் அதிமுக. வில் சேர்த்து கொள்ளுங்கள் என்று பலதரப்பட்ட வழிகளில் இருந்து வந்த அழுத்தம், சசிகலா வை பொறுத்தவரை முதல்வர் இ.பி.எஸ்.ஸிடம் யாசகம் செய்வதைப் போன்ற தோற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது..

செல்வி ஜெயலலிதா உயிரோடு இருந்த வரை ராணியாக அசைக்க முடியாத ராஜாங்கத்தை அதிமுக. வில் நடத்தி வந்த தனக்கு, அதிகாரத்தை கையில் வைத்திருக்கும் கூட்டத்தினரால் தொடர்ந்து ஏற்படுத்தும் அவமானங்களை தாங்கி கொண்டு அரசிய லில் நீடிக்க வேண்டுமா என்ற எண்ணம் உண்மையாக தோன்றி இருந்தால் அவரின் முடிவை உண்மையாகவே வரவேற்கலாம்…ஆனால் அவரின் கடந்த கால அரசியல் செயல்பாடுகளோடு இந்த விலகலை ஒப்பிட்டு பார்க்கும் போது செல்வி ஜெயலலிதா 1989 காலகட்டத்தில் அரசியலில் இருந்து விலகுவதாக எழுதி வைத்திருந்த கடிதம் எப்படியோ லீக் ஆகி அப்போது பரபரப்பை ஏற்படுத்தினார்..அதே போன்ற அரசியல் யுக்தியை அவரது வழியிலேயே எடுத்து அனுதாபத்தை பெருக்கி கொள்ளும் முயற்சியா இந்த விலகல் முடிவு என்று ஒருபக்கம் சந்தேகம் எழுவதையும் தவிர்க்க முடியவில்லை..

ஏனெனில் அவரது சமுதாயத்தைச் சேர்ந்த பெரும்பான்மையான அதிமுக நிர்வாகிகள் இன்னமும் சசிகலாவை முழுசாக நம்பி அவர் தலைமையில் அணிவகுக்க தயங்குகிறார்கள்..அதற்கு காரணம் டிடிவி தினகரன் மற்றும் மன்னார்குடி உறவுகள்.. பிளவுபட்ட அதிமுக ஒன்றாக இணைந்து மீண்டும் சசிகலா தலைமையில் செயல்பட தொடங்கினால்கூட அவர் சுதந்திரமாக செயல்பட முடியுமா அதிமுக ஒற்றை தலைமையின் கீழ் வந்தால் அவரது உறவினர்கள் அதிகாரம் செலுத்த தொடங்குவார்கள்..கடந்த நான்காண்டுகளில் அவர்களை புறக்கணித்தவர்களை எல்லாம் பழி வாங்குவார்கள் என்ற பயமே இப்போதும் சசிகலாவின் சமுதாயத்தைச் சேர்ந்த முன்னணி அதிமுக நிர்வாகிகளை ஆட்டி வைத்து கொண்டு இருக்கிறது.. அதுமட்டுமின்றி கடந்த நான்கு ஆண்டுகளில் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை யும் கூட மிரட்டி பிடுங்கி விடுவார்கள் என்ற அச்சமும் அவர்களிடம் உள்ளது.. தனது சமுதாய மக்களே தனது அரசியல் மறுபிரவேசத்தை கண்டு பயப்படுகிறார்களே என்ற ஆதங்கமும் எழுந்துள்ளதால் கையறு நிலையில் இப்போது இருக்கிறார் சசிகலா இப்படிபட்ட நேரத்தில் டிடிவி தினகரனும் தன்னை பிணைய கைதி போல நடந்துவதைக் கண்டு மனம் நொந்து போய் இருக்கலாம்..ர்.. தினகரனின் ஆலோசனைபடி நடப்பதை சசிகலாவின் மற்ற உறவுகள் எதிர்க்கிறார்கள்.. இப்படி பல்வேறு குழப்பங்களில் சிக்கி தவிக்கும் சசிகலா அரசியலில் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறவே இந்த அரசியல் துறவறம் அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார் என்று நாங்கள் சந்தேகப்படுகிறோம்..இதுபோன்ற ராஜதந்திரங்களை எடுத்து தான் ஜெயலலிதா வையே அவர் தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தார்..ஆனால் அவரின் ராஜதந்திரம் எடப்பாடியார் முன்பு இன்றைக்கு எடுபடாது என்பதுதான் உண்மை..கடந்த நான்காண்டுகளில் முதல்வர் இபிஎஸ் அமைத்து தந்த பாதைதான் வெற்றிகரமானதாக இருக்கிறது.. அந்த அனுபவத்தில் வரும் தேர்தலிலும் எடப்பாடியார் வகுத்துள்ள வியூகம் தான் வெற்றிக்கு வழிவகுக்கும் என நாங்கள் உறுதியாக நம்புகிறோம்.. அதனால் சசிகலாவோ தினகரனோ எந்த சித்துவிளையாட்டு நடத்தினாலும் இனிமேலும் ஏமாறுவதற்கு தயாராக இல்லை அதிமுக தொண்டர்கள் என்பதுதான் இப்போதைய களயதார்த்தம் என்றார் தெளிவான குரலில் இபிஎஸ்.ஸின் விசுவாசி…

2016 ல் ஒரு தர்மயுத்த நாடகம் அரங்கேறியது…2021ல் ஒரு அரசியல் துறவறம் நாடகமா..

தமிழக ம் தாங்காதடா சாமி….

சசிகலா விலகல் குறித்து அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கருத்து இதோ….

சசிகலாவின் அறிக்கையை பார்த்து அதிர்ச்சி அடைந்தேன் –

சசிகலா அவரது உணர்வுகளை வெளிப்படுத்தியுள்ளார். சசிகலாவின் அறிக்கை எனக்கு சோர்வை வரவழைக்கிறது.

சசிகலாவை அரசியலில் இருந்து விலக வேண்டாம் என அரை மணி நேரம் வலியுறுத்தினேன் –

இவ்வாறு டி.டி.வி.தினகரன் தெரிவித்தார்…

சசிகலாவை இணைத்து கொண்டால்தான் அதிமுக வலிமை பெறும் என்று எந்த பாஜக வலியுறுத்தியதோ அதே பாஜக சத்தம் இல்லாமல் பின்வாங்குகிறது…சசிகலா விலகல் பற்றி தமிழக பாஜக தலைவர் முருகன் கருத்து இதோ….

சசிகலா அரசியலில் இருந்து ஒதுங்கும் அறிவிப்பை முழு மனதுடன் வரவேற்கிறேன் – எல்.முருகன், பாஜக மாநில தலைவர்.