Sun. May 5th, 2024

தமிழகத்தில் இரண்டு நாள் தேர்தல் பரப்புரைக்காக காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, நேற்று தூத்துக்குடி வந்தார். அந்த மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பரப்புரை மேற்கொண்ட அவர், இரண்டாம் நாளாக இன்று திருநெல்வேலி மாவட்டத்தில் பரப்புரை மேற்கொண்டார்.

பாளையங்கோட்டையில் திரண்டிருந்த மக்களிடம் ராகுல்காந்தி உரையாற்றினார். அதன் விவரம் இதோ…


CAA சட்டம் என்பது இந்தியாவில் பாகுபாடு விளைவிக்கும் சட்டம்;
காங்கிரஸ் என்றைக்கும் அதை அனுமதிக்காது, ஆதரிக்காது!

நாம் ஒன்றாக சேர்ந்து ஒரு புதிய திசையை, ஒரு புதிய பாதையை தமிழகத்திற்கு காண்பிப்போம். மேலும் தமிழக இளைஞர்களின் முழு திறனையும் பயன்படுத்தி நாட்டின் பிற பகுதிகளுக்கும் நல்வழி காட்டுவோம்

சீன உற்பத்தியின் சவாலை நாங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டுமென்றால் அது சிறு மற்றும் நடுத்தர வணிகர்களை பெருக்குவதன் மூலம் தான் நடைபெறும்.

தமிழக முதல்வரை ஊழல் மூலம் கட்டுக்குள் கொண்டு வந்ததைப் போல,தமிழக மக்களையும் தம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து விடலாம் என்று பிரதமர் நரேந்திர மோடி நினைக்கின்றார்.

தமிழக முதல்வர் தமிழ் மக்களுக்கு தான் அடிபணிய வேண்டுமே தவிர மோடிக்கு அல்ல.

தமிழக முதல்வர் தமிழ் மக்களின் விருப்பத்திற்கு ஏற்ப நாட்டை ஆள வேண்டும். அவர் மோடிக்கு அடிபணிந்திருக்கக் கூடாது.

இந்த நாட்டில் வேர்வையும், உழைப்பையும் மனதையும் செலுத்தி வேலை செய்பவனுக்கு எதுவும் கிடைப்பதில்லை. மாறாக தூங்கி கொண்டு இருப்பவனுக்கு எல்லாம் கிடைக்கின்றது.

தமிழக மக்களை மதிக்கும்படியான அரசு உருவாக நாங்கள் உங்களுக்கு உதவியாக இருப்போம்.

இந்தியாவில் சிலர் மட்டும் பணக்கார்கள் ஆகின்றனர் ஆனால் பலர் ஏழைகளாகவே இருக்கின்றனர்.
பாஜகவின் வருகையால் இந்த ஏற்றத்தாழ்வு வலுப்பெற்றுள்ளது.

நான் வருத்ததோடு கூறுகிறேன், நம் இந்திய நாட்டின் ஜனநாயகம் இறந்துவிட்டது. அதற்கு காரணம் RSS போன்ற இயக்கம் பெரிய நிதி அமைப்புகளுடன் சேர்ந்து இந்திய நிறுவனங்களை கொஞ்சம் கொஞ்சமாக அழித்துவிட்டது.

தமிழ்நாட்டை கட்டுப்படுத்த முடியும் என யார் நினைத்தாலும் அது என்றும் முடியாது என்பதை வரலாறு பலமுறை உணர்த்தியுள்ளது.

ஊழலையும் ஆதிக்கத்தையும் எதிர்த்து நிற்பதே நீங்கள் நம் நாட்டிற்கு செய்யும் சேவையாகும்.

தமிழகம் சிரித்தால் நானும் சிரிப்பேன், மகிழ்வேன்

இவ்வாறு ராகுல்காந்தி கூறினார்.