Sun. May 5th, 2024

திருநெல்வேலி மாவட்டத்தில் சுற்றுப் பயணத்தில் மேற்கொண்டுள்ள காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆலங்குளத்தில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டர். அப்போது அவர் கூறியதாவது,

பீடித் தொழிலாளர்கள், விவசாயிகள் நிறைந்த பகுதியாக ஆலங்குளம் உள்ளது. பணமதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி. போன்றவற்றால் பீடி தொழில் உள்ளிட்ட சிறுதொழில்களை நசிந்து வருகின்றன.

இந்தியாவில் அதிகளவிலான வேலை வாய்ப்புகளை சிறு தொழில்கள் வழங்கி வரும் நிலையில், சிறு தொழில்கள் தான் வேலைவாய்ப்பிற்கு முதுகெலும்பாக உள்ளது. அந்த முதுகெலும்பை பிரதமர் நரேந்திர மோடி நசுக்கி அழித்து வருகிறார்.

மூன்று வேளாண் சட்டங்கள் மூலம் விவசாயத்தை அழித்து வருகிறார். அதுபோலவே, சிறுதொழில்களையும் நரேந்திர மோடி அழித்து வருகிறார்.

தமிழ் மொழியையும், கலாச்சாரத்தையும் வரலாற்றையும் கேலி செய்யும் பிரதமர், பிராந்திய மொழிகளை அழிப்பதில் தீவிரமாக இருக்கிறார்.

தமிழக முதலமைச்சரின் நடவடிக்கை ஏமாற்றம் தருவதாக உள்ளது. தன்னுடைய ஊழல் நடவடிக்கைகளில் இருந்து தப்பித்துக் கொள்வதற்காக மோடியை துதி பாடி வருகிறார்.

தமிழ்நாட்டு அரசியல் என்பது தமிழக மக்களால் தீர்மானிக்கப்பட வேண்டும். தமிழக மக்கள் நேர்மையான கலாச்சாரத்தைக் கொண்டவர்கள். ஏழைகளையும், தொழிலாளர்களையும் விவசாயிகளையும் அரவணைக்கும் ஆட்சி அமைய வேண்டும்.

மாநில அரசு வேலை வாய்ப்புகளை உருவாக்க வேண்டும், விவசாயத்தை வளர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு ராகுல்காந்தி பேசினார். முன்னதாக அவர் நெல்லையப்பர் கோவிலுக்குச் சென்று வழிபட்டதுடன், பெருந்தலைவர் காமராஜர் சிலைக்கு மாலையணிவித்து மரியாதை செலுத்தினார்.