Sun. May 19th, 2024

காங்கிரஸ் இளம் தலைவர் ராகுல்காந்தி, தமிழகத்தில் தனது 3-ம் கட்ட பிரசாரத்தை தூத்துக்குடியில் இன்று தொடங்கினார். 

குரூஸ் பர்னாந்து சிலை அருகே பிரமாண்டமான வாகன பேரணியில் அவர் பங்கேற்றார். சாலையில் நடந்து சென்றவாறே, பொதுமக்களிடையே காங்கிரஸுக்கு அவர் ஆதரவு திரட்டினார்.

பின்னர், முத்தையாபுரம் அருகே கோவங்காடு விலக்கு பகுதிக்கு சென்றார். அங்கு உப்பளத் தொழிலாளர்களை சந்தித்து உரையாடி அவர்களிடம் குறைகளை கேட்டறிந்தார். அங்கு ராகுல்காந்தி பேசிதாவது:

தமிழ் பண்பாட்டையும் கலாச்சாரத்தையும் மத்திய அரசு அவமதிக்கிறது/

நாட்டின் பண்பாடும், கலாச்சாரமும் மதிப்பட வேண்டும். மத்திய அரசின் அடிமையாக அதிமுக அரசு உள்ளது/

நான் வருத்ததோடு கூறுகிறேன், நம் இந்திய நாட்டின் ஜனநாயகம் இறந்துவிட்டது. அதற்கு காரணம் RSS போன்ற இயக்கம் பெரிய நிதி அமைப்புகளுடன் சேர்ந்து இந்திய நிறுவனங்களை கொஞ்சம் கொஞ்சமாக அழித்துவிட்டது

தமிழ்நாட்டை கட்டுப்படுத்த முடியும் என யார் நினைத்தாலும் அது என்றும் முடியாது என்பதை வரலாறு பலமுறை உணர்த்தியுள்ளது.

இவ்வாறு ராகுல்காநிதி பேசினார்.

தூத்துக்குடியில் முதல் நிகழ்வாக, வ.உ.சி. கல்லூரியில் வழக்கறிஞர்களுடன் ராகுல்காந்தி கலந்துரையாடினர்.

.

மாலையில், ஆழ்வார்திருநகரிலும், . சாத்தான்குளத்திலும் ஆதரவு திரட்டுகிறார். பின்னர், நெல்லை மாவட்டத்தில் பிரசாரத்தை தொடங்கும் ராகுல்காந்தி நாங்குநேரி டோல்கேட் அருகே நடைபெறும் தேர்தல் பரப்புரை கூட்டத்தில் ராகுல்காந்தி கலந்துகொள்கிறார். இரவு நெல்லையில் ராகுல்காந்தி தங்குகிறார்.