Fri. Nov 22nd, 2024

வன்னியர்களுக்கான, உள் இட ஒதுக்கீட்டு மசோதா, “குறை பிரசவ குழந்தை”


வன்னியர்களை ஏமாற்ற, உடனே சட்டமாக்கமுடியாத, “உள் இட ஒதுக்கீட்டு” மசோதா.. என்ற தலைப்பில் ஒரு பதிவு வன்னியப் பிரமுகர்கள் மட்டுமே இடம் பெற்றுள்ள வாட்ஸ் அப் குரூப்புகளில் தீயாக பரவி வருகிறது. அதன் விவரம் இதோதான்…


10.5% சதவிகித, வன்னியர்களுக்கான, உள் இட ஒதுக்கீடு மசோதா, இன்று (26.02.2021), தமிழ் நாடு சட்டசபையில், மாலை 4.00 மணியளவில், தாக்கல் செய்யப்பட்டது.எதிர்கட்சிகளே, அவையில் இல்லாத நிலையில், மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தாக்கல் செய்யப்பட்ட மசோதா, ஆளுங்கட்சி உறுப்பினர்களால் மட்டுமே, “குரல்” ஒலியால், ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்ட 30 நிமிடங்களிலேயே, தேர்தல் ஆணையத்தால், சட்டமன்ற தேர்தலுக்கான தேதி, அறிவிக்கப்பட்டது. தேர்தலுக்கான, தேதி அறிவித்த பின், அனைத்து அரசு இயந்திர நடவடிக்கைகளும், தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டில் வந்துவிட்டது.

10.5%சதவிகித, உள் இட ஒதுக்கீட்டு மசோதாவின், அடுத்த பயணம், ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பப்படவேண்டும். தேர்தல் தேதியை, ஆணையம் அறிவித்த பின், ஆளுநர் உள்ளிட்ட, அனைத்து அரசு இயந்திரங்களும், நிதி பகிர்வு மற்றும், தேர்தலுக்கான தற்ப்போதைய நடைமுறைகளை மட்டுமே செயல்படுத்தும்.

சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட, மசோதாவில், ஆளுநர் கையொப்பம் இட்டால் மட்டுமே, மசோதா சட்டமாகும்.ஆளுநரின்அலுவலகமும், தேர்தல் ஆணையத்தின், கட்டுப்பாட்டில், வந்துவிட்டதால், மசோதாவில், ஆளுநர் எப்போது கையொப்பம் இடுவார்? எப்போது சட்டமாகும்?

சட்டமன்ற தேர்தல், 06.04.2021ல் என்று, தேர்தல் ஆணையம் அறிவித்துவிட்டது. இன்று( நேற்று )சட்ட மன்றத்தில், ஆளுங்கட்சியால் மட்டுமே, குரல் ஒலியால் மட்டுமே, நிறைவேற்றப்பட்ட, வன்னியர்களுக்கான,10.5%சதவிகத உள் இட ஒதுக்கீட்டு மசோதா, நடைபெற இருக்கும் தேர்தலுக்கு முன், சட்டமாவதற்க்கு, 100%சதவிகிதம் சாத்தியம் இல்லாத ஒன்று.

தேர்தல் முடிவுக்குப்பின்,ஆட்சிப்போறுப்பேற்க்கும், கட்சியின் விருப்பத்திற்க்கேற்ப்ப, மசோதா சட்டமாவது, தீர்மானிக்கப்படும். சட்டமாக்கப்பாடாத, மசோதாவை, வன்னியர்களிடம் காட்டி, சட்டமன்ற தேர்தலில், ஓட்டு வேட்டையாடப்பார்க்கிறார்கள், எடப்பாடியாரும், ராமதாஸூம்.

10.5% சதவிகித உள் இட ஒதுக்கீட்டு, மசோதாவில், “சென்னை, உயர்நீதிமன்றத்தில், C.N.இராமமூர்த்தி என்ற வன்னியரால் வழக்கு தொடுக்கப்பட்டு, அதன் அடிப்படையில், உயர்நீதிமன்றம் வழங்கிய உத்தரவின் அடிப்படையில், மிகவும் பிற்ப்டுத்தப்பட்டோர் நல ஆணையத் தலைவர், நீதியரசர் திரு.ஜனார்த்தனம் அவர்களின் பரிந்துரையின் பேரில்” , என்று குறிப்பிடாமல், அம்பாசங்கர் கமிஷன் 1985 ல் அளித்த, அறிக்கையின், ஜாதிவாரி கணக்கெடுப்பின் அடிப்படையில் மட்டுமே, கொடுக்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

(அம்பாசங்கர் கமிஷனின், பரிந்துரையில், உள் இட ஒதுக்கீடு என்பது கிடையாது)

முழுமையாக பிறக்காத,10.5%சதவிகித, உள் இட ஒதுக்கீட்டு குழந்தைக்கு,”பெயர் சூட்டு விழா” நடத்துகிறார், எடப்பாடியார்.40 வருடமாக, வன்னியர்களை ஏமாற்றிய ராமதாஸ், “உள் இட ஒதுக்கீடு” என்ற, “குறை பிரசவ” குழந்தையை காட்டி, வன்னியர்கள தொடர்ந்து ஏமாற்றப்பார்க்கிறார் ராமதாஸ்.

10.5%சதவிகித உள் இட ஒதுக்கீட்டை, நேரத்தோடு வழங்காமல், சட்டமாக்கப்படாத/முடியாத, மசோதாவை காட்டி, ஓட்டுக்காக,வன்னியர்களை ஏமாற்றி, அரசியல் வியாபாரம் நடத்தும், எடப்பாடியாரையும்,ராமதாஸையும்,2021 தேர்தல் களத்தில் சந்திப்போம்.

வன்னியர்களே, உள் இட ஒதுக்கீட்டு மசோதா என்பது ஒரு நாடகமே…

உஷார்…உஷார்…

ஒரு. வன்னியன்.

இப்படியொரு பதிவு, அனைத்து வன்னியர்கள் வாட்ஸ் அப் குழுவிலும் பரப்பப்பட்டு வருகிறது. இது, பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸுக்கு எதிரான பிரசாரமாகவும் சட்டமன்றத் தேர்தலின்போது முன்னெடுக்கப்படும் என வன்னியர் சங்க பிரமுகர்கள் தெரிவிக்கின்றனர்.