Fri. Nov 22nd, 2024

அ.தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள பா.ம.க., தொகுதி ஒப்பந்தத்தில் முதல் கட்சியாக இன்று கையெழுத்திட டாக்டர் ராமதாஸ் ரெடியாகிவிட்டார் என்று தைலாபுரம் படசி சொல்கிறது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலினபோது இருந்த குழப்பம் மாதிரி, சட்டமன்றத் தேர்தலில் யாருடன் கூட்டணி என்பதில் டாக்டர் ராமதாஸுககு ஒரு போதும் குழப்பமே இருந்ததில்லை என்கிறார்கள் அவரை நிழல்போல தொடரும் பா.ம.க. நிர்வாகிகள்.

தனது ஆயுளுக்கும் அதிமுக கூட்டணியை விட்டு விலகப்போவதில்லை என்ற மனநிலைக்கு டாக்டர், கடந்த 2019 ல் நடந்த சட்டமன்ற இடைத்தேர்தலின்போதே வந்துவிட்டாராம்.

விட்டுக் கொடுப்பதிலும், மனம் நோகாமல் காரியம் ஆற்றுவதிலும், எடப்பாடி போன்ற ஒரு மனிதரை என் வாழ்நாளிலேயே பார்த்தது இல்லை என்று அவ்வப்போது டாக்டர் முணுமுணுப்பதாக கூறுகிறார்கள் அவரது நலம் விரும்பிகள். அ.தி.மு.க.வுடான கூட்டணியை தொடர்வதற்கு வன்னியருக்கு உள் ஒதுக்கீடு என்ற கோரிக்கையை நிபந்தனையாக வைப்பது பற்றி டாக்டர் ராமதாஸே நினைக்கவில்லையாம். ஆனால், கடந்த 2019 ல் நடைபெற்ற சட்டமன்ற இடைத்தேர்தலின்போது, வடமாவட்டஙகளில் பிரசாரம் செய்த தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின்தான், வன்னியருக்கு உள்ஒதுக்கீடு என்ற வாக்குறுதியை முன் வைத்தார். அதனால், வேறு வழியில்லாமல், சட்டமன்றத் தேர்தலில் கூட்டணி அமைக்க, உள்ஒதுக்கீடு கோரிக்கையை டாக்டர் ராமதாஸ் நிபந்தனை வைக்கவேண்டிய நெருக்கடி ஏற்பட்டுவிட்டதாம்.

உள்ஒதுக்கீடு கோரிக்கையைப் பற்றி வெளிப்படையாக தெரிவிப்பதற்கு முன்பாகவே, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் தனிப்பட்ட முறையில் பேசி ஒப்புதல் பெற்ற பிறகே, கூட்டணி சேர்வதற்கு உள்இடஒதுக்கீடு கோரிக்கையை முக்கிய நிபந்தனையாக வைத்து, தொடர் போராட்டங்களை டாக்டர் ராமதாஸ் அறிவித்தாக கூறுகிறார்கள் வடமாவட்ட பா.ம.க. நிர்வாகிகள்.

அ.தி.மு.க. மற்றும் பா.ம.க. இடையே ஏற்கெனவே ஒத்திகை பார்க்கப்பட்ட மாதிரியே நேற்று, வன்னியர்களுக்கு 10 புள்ளி 50 சதவிகித இடஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்றிவிட்டார் எடப்பாடி பழனிசாமி. அந்த நிமிடத்திலேயே டாக்டர் ராமதாஸ் நேரடியாக தலைமைச் செயலகம் வந்து முதலமைச்சரை சந்தித்து நன்றியையும், வாழ்ததையும் தெரிவிக்க தயாரானாராம். ஆனால், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதையடுத்து, தனது மகன் டாக்டர் அன்புமணியை அனுப்பி வைத்தாராம்.

கடந்த 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலின்போது, அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைப்பதற்காக, பா.ம.க. சார்பில் முன்வைக்கப்பட்ட 10 கோரிக்கைகளில், 4 கோரிக்கைகளை நிறைவேற்றியதுடன், அப்போது கோரிக்கையே வைக்காத வன்னியருக்கான உள்ஒதுக்கீடு தொடர்பான மசோதாவை போனஸாக எடப்பாடி பழனிசாமி அரசு நிறைவேற்றிவிட்டது. அதனால், உச்சகட்ட சந்தோஷத்தில் உள்ள, கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது வைத்த 10 கோரிக்கைகளில் 4 கோரிக்களை அழிததுவிட்டு, எஞ்சிய 7 கோரிக்கைகளை மீண்டும் நினைவுப்படுத்துவதுடன்,மேலும் தமிழை ஆட்சி மொழியாக்குவது உள்பட சில கோரிக்கைளை வைத்து இன்று அ.தி.மு.க.வுடனான தொகுதி பங்கீட்டில் டாக்டர் ராமதாஸ் கையெழுத்திட தயாராகிவிட்டார் என்கிறார்கள், பா.ம.க. இரண்டாம் கட்ட தலைவர்கள்.

கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தலின்போது, டாக்டர் ராமதாஸ் முனவைத்த கோரிக்கைகளை ஒரு பார்வை பார்ப்போம்..

01 காவிரி பாசன பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண்மை மண்டலமாக அறிவிக்க வேண்டும்

02. தமிழகத்தின் 20 பாசன திட்டங்கள் மற்றும் கோதாவரி – காவிரி இணைப்பு திட்டத்தை செயல்படுத்த வேண்டும்

03. இட ஒதுக்கீட்டை காக்க, தமிழகத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும்

04 ராஜிவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள ஏழு தமிழர்களை விடுதலை செய்ய வேண்டும்.

05. படிப்படியாக மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும். உடனடியாக 500 மதுக்கடைகளை மூட வேண்டும்.

06. தமிழகத்தில் நீர்வளத்தை காக்க மணல் குவாரிகளை உடனடியாக மூட வேண்டும்.

07. அரசு ஊழியர்களுக்கு பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.

08. காவிரியில், கர்நாடகா மேகதாது அணை கட்ட அனுமதிக்கக் கூடாது.

09. விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும். உழவர் ஊதியக்குழு அமைக்க வேண்டும்.

10. நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும்.

இந்த பத்தில், 1, 2,3 மற்றும் 9 என்ற வரிசையில் கோரிக்கைகளை முழுமையாகவோ, பகுதியாகவோ அ.தி.மு.க. அரசு நிறைவேற்றியிருக்கிறது. இது போதாதா, அ.தி.மு.க.வுடன் பா.ம.க கூட்டணி அமைப்பதற்கு என்கிறார்கள் சென்னை மாவட்ட பா.ம.க. நிர்வாகிகள்.

எடப்பாடி பழனிசாமிக்கும், டாக்டர் ராமதாஸுக்கும் இடையே நல்ல புரிதல் இருப்பதால், அதிமுக மற்றும் பாமக இடையேயான கூட்டணியில் எந்த நெருடலும் இருக்காது. பாமக.வுக்கு 20 லில் இருந்து 25 தொகுதிகளுக்குள் பாமக.வுக்கு ஒதுக்கப்படலாம் என்கிறார்கள் அதிமுக மூத்த நிர்வாகிகள்.

அதன் முன்னோட்டமாக, பாஜக தலைவர்கள், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரை சந்தித்து இன்று காலை தொகுதி ஒதுக்கீடு தொடர்பாக பேச்சுவார்ததை நடந்தியிருக்கிறார்கள். பாஜக முந்திக் கொண்டு பேச்சுவார்த்தையை தொடங்கியிருந்தாலும் கூட, தொகுதி பங்கீடு ஒப்பந்தத்தில் முதல் கையெழுத்தை எங்கள் டாக்டர்தான் போடுவார் என கெத்து காட்டுகிறார்கள் பாமக இரண்டாம் கட்ட தலைவர்கள். மதிய உணவுக்கு முன்பாக, அ.தி.மு.க. மற்றும் பாமக இடையே ஒப்பந்தம் ஆகும் வைபவம் முடிந்துவிடும் என்றும் அவர்கள் மகிழ்ச்சி தெரிவிக்கிறார்கள்.

அதிமுக கூட்டணிதான், வெற்றிக் கூட்டணி என்ற முழக்கத்தையே இன்றைய தினமே டாக்டர் ராமதாஸிடம் இருந்து நிச்சயம் எதிர்பார்க்கலாம். அதில் மாற்றம் இருககாதாம்.