Sat. Nov 23rd, 2024

தமிழ்நாடு அரசு நிர்வாகத்தில் 38 ஆண்டுகளுக்கு மேலான அரசுப் பணியை மிகுந்த நேர்மையுடன் ஆற்றியது மட்டுமின்றி பொதுமக்களின் கோரிக்கைகளை மிகுந்த மனிதநேயத்துடன் அணுகி தீர்த்து வைப்பதிலும் ஆர்வம் காட்டி வந்துள்ள தற்போதைய தலைமைச் செயலாளர் முனைவர் வெ.இறையன்பு ஐ.ஏ.எஸ்., தாம் ஓய்வு பெறும் தேதியையும் பகிரங்கமாக அறிவித்ததைக் கேட்டு, அரசு அலுவலர்கள் சோகமடைந்துள்ளனர்.

முனைவர் வெ.இறை அன்பு ஐஏஎஸ்..

அறிமுகமே தேவையில்லாத அளவிற்கு தமிழ்நாடு முழுவதும் மட்டுமின்றி தமிழர்கள் வாழும் தரணியெங்கும் பிரபலமாகியிருப்பவர்.

ஐஏஎஸ் அதிகாரியாக, தமிழ்நாட்டு மக்களுக்கு ஆற்றிய சேவைக்கு இணையாகவே, தமிழ் இலக்கியத்திற்கும் தொண்டாற்றியிருப்பவர். புகழை மென்மேலும் பரப்பி வருபவர்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் ஆட்சியில் கடந்த 2021 ஆம் ஆண்டு மே மாதம் 7 ஆம் தேதி தமிழ்நாடு அரசின் புதிய தலைமைச் செயலாளராக பதவியேற்றார் முனைவர் வெ.இறை அன்பு ஐ.ஏ.எஸ்.

இரண்டு ஆண்டுகளைக் கடந்து தலைமைச் செயலாளர் பதவியில் நீடித்து வரும் முனைவர் வெ.இறை அன்பு ஐஏஎஸ், 60 வயதை நிறைவு செய்வதை அடுத்து வரும் ஜுன் 30 ஆம் தேதி, அவர் வகித்து வரும் பதவியில் இருந்து ஓய்வு பெறவுள்ளார்.

வெ.இறை அன்பு ஐஏஎஸ்ஸின் ஓய்வுக் காலம் குறித்து ஊடகங்களில் அவ்வப்போது செய்திகள் வெளியிட்டு வந்த போதும், அதிகாரப்பூர்வமான அறிவிப்பு, தமிழ்நாடு அரசு தரப்பில் இருந்து இதுவரை வெளியிடப்படாமலேயே இருந்து வருகிறது.

ஊடகங்களின் யூகங்களுக்கு ஏற்ப, தலைமைச் செயலாளர் பதவியில் இருந்து வெ.இறை அன்பு ஐஏஎஸ் விலகிய பிறகு, அடுத்த தலைமைச் செயலாளராக பதவியில் அமரும் மூத்த ஐஏஎஸ் அதிகாரி யார் ?என்பது தொடர்பான விவாதங்களையும் ஊடகங்கள் முன்னெடுத்து வருகின்றன.

இந்நிலையில், தலைமைச் செயலாளர் பதவியில் இருந்து தாம் ஓய்வு பெறப் போகிறேன் என்ற தகவலை, முனைவர் வெ.இறை அன்பு ஐஏஎஸ் அவர்களே பகிரங்கமாக அறிவித்ததுதான் அரசு அலுவலர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக தலைமைச் செயலாளராக பணியாற்றி வரும் முனைவர் வெ.இறையன்பு ஐஏஎஸ், ஒரு நாளை கூட ஏன், ஒருமணிநேரத்தை கூட வீணடிக்காமல், மக்களுக்கு சேவையாற்றுவதையே தலையாய கடமையாக உறுதிபூண்டு அரசுப் பணியில் நீடித்து வருகிறார் என்பதுதான் இளம்தலைமுறைக்கான பாடமாகும்.

தலைமைச் செயலகத்திற்கு முதல் அதிகாரியாக வருவதுடன் அலுவலகத்தில் இருந்து வெளியேறும் கடைசி அதிகாரியாகவும் இருந்து வந்திருக்கிறார், வருகிறார் முனைவர் வெ.இறையன்பு ஐஏஎஸ்., என்பதுதான் தலைமைச் செயலாளர் என்ற பதவிக்கு மிகப்பெரிய புகழைத் தேடி தந்திருக்கிறது.

வார நாட்களில் மட்டுமின்றி வார விடுமுறை நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலும், சொந்த நலனைப் பற்றி துளியும் அக்கறை கொள்ளாமல், அரசுப் பணியாற்றுவதிலும் மக்கள் சேவையில் முழுமையாக ஈடுபடுத்திக் கொள்வதிலும் தணியாத ஆர்வம் காட்டுபவர் வெ.இறையன்பு ஐ.ஏ.எஸ் என்றால், அது மிகையாகாது.

அரசுப் பணியில் 38 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள வெ.இறையன்பு ஐ.ஏ.எஸ்., மே 20 ஆம் தேதி (சனிக்கிழமை) மாலை 4 மணி காணொளி வாயிலாக ஈரோடு மாவட்டம் பவானிசாகரில் உள்ள அரசு அலுவலர் பயிற்சி நிலையத்தில் அரசு அலுவலர் அடிப்படை பயிற்சி மேற்கொண்டு வரும் அரசு பணியாளர்களிடம் உரையாற்றியுள்ளார்.

30 நிமிடத்திற்கு மேலான வெ.இறை அன்பு ஐஏஎஸ்ஸின் உணர்ச்சி மிகுந்த அறிவுரைகளைக் கேட்டு, 700க்கும் மேற்பட்ட அரசுப் பணியாளர்கள் நெகிழ்ச்சியடைந்தனர்.

பேரூராட்சி உள்ளிட்ட பல்வேறு உள்ளாட்சி அமைப்புகளுக்கு நிர்வாக அதிகாரிகளாக பதவி உயர்வு பெறவுள்ள அரசு பணியாளர்களின் 55 வது அணி, கடந்த ஏப்ரல் 28 முதல் மே 15ம் தேதி வரை பயிற்சி முகாமில் கலந்துகொண்டுள்ளது. கடந்த 20 நாட்களுக்கு மேலாக பவானிசாகர் பயிற்சி நிலையத்தில் அரசு அலுவலர் அடிப்படை குறித்து பயிற்சி பெற்று வருகின்றனர்.

உள்ளாட்சி மன்றங்களுக்கு நிர்வாக தலைமை ஏற்கவுள்ள அதிகாரிகள் இடையே தலைமைச் செயலாளர் உதிர்த்த ஒவ்வொரு வார்த்தைகளும் வேத வாக்காகவே அமைந்திருக்கிறது.

” அரசு அதிகாரிகளாக பதவி வகிக்கும் நேரத்தில், மக்களின் கோரிக்கைகள் மீது மனிதநேயத்துடன் தீர்வு காண வேண்டும் என்ற சிந்தனைதான் முதன்மையாக இருக்க வேண்டும். பொதுமக்களின் கோரிக்கைகளில் தகவல் முழுமையாக குறிப்பிடப்படவில்லை என்றாலும் கூட, அதை ஒரு குறையாக சுட்டிக் காட்டி புறக்கணிக்காமல் கோரிக்கையில் உள்ள நியாயத்தை உள்வாங்கி தீர்வு காண முழு ஆற்றலையும் செலுத்த வேண்டும்.

அரசுப் பணியும் மக்களுக்கு சேவையாற்ற கிடைத்துள்ள அரிய வாய்ப்பையும், வாழ்க்கையில் கிடைத்த மிகப்பெரிய பொறுப்பாக உணர்ந்து, மக்களின் பிரச்னைகளுக்கு தீர்வு காண வேண்டும். அரசுப் பணியை நிறைவு செய்யும் நாள் வரையிலும் மக்களுக்கு பணியாற்றுவதையே முதன்மை நோக்கமாக இருக்க வேண்டும்.

1985 ஆம் ஆண்டு மார்ச் 21 ஆம் தேதி ஐஏஎஸ் அதிகாரியாக பணியை தொடங்கி, தமது 38 ஆண்டுகள் 3 மாதம் என தொடரும் ஒட்டுமொத்த அரசுப் பணியில் மக்களுக்கு சேவையாற்றுவதற்கே முழுமையாக செலவிட்டதையும், அரசு மக்களுக்கு நேர்மையுடன் பணியாற்றி வந்துள்ளதையும் சுட்டிக்காட்டிய தலைமைச் செயலாளர் முனைவர் வெ.இறையன்பு ஐஏஎஸ், ஜுன் 30 ஆம் தேதி அரசுப் பணியில் இருந்து ஓய்வு பெறுவதையும் ” வெளிப்படையாக அறிவித்திருக்கிறார்.

தமது ஓய்வுத் தேதியை வெ.இறை அன்பு ஐஏஎஸ் அறிவித்தபோது, ​​கூட்டரங்கில் திரண்டிருந்த 700க்கும் மேற்பட்ட அரசுப் பணியாளர்கள், மனதில் ஏற்பட்ட துக்கத்தை வெளிப்படுத்த முடியாத வகையில் சோகத்தில் ஆழ்ந்தனர்.

பல நொடிகள் நீடித்த மௌனத்தை கலைக்கும் வகையில் பயிற்சியில் கலந்து கொண்ட இளம் அலுவலர் ஒருவர், அரசுப் பணியில் பின்பற்ற வேண்டிய ஒழுக்க நெறிமுறைகள் குறித்த கேள்வி எழுப்பியதை அடுத்து, கூட்டரங்கு மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது.

பவானி சாகரில் அரசு பணியாளர்களுக்கான பயிற்சி நிறுவனம் தொடங்கப்பட்ட ஆண்டு முதல், பயிற்சி நிறுவனம் பெற்றுள்ள வளர்ச்சி, சிறந்த வல்லுநர்களை கொண்டு வழங்கப்படும் பயிற்சி, அதனால் பயனடைந்த அரசு அலுவலர்கள் குறித்து விளக்கமாகவும் விரிவாகவும் பதிலளித்துள்ளார் தலைமைச் செயலாளர் முனைவர் வெ.இறை அன்பு ஐஏஎஸ்.

ஊரக வளர்ச்சி மற்றும் நகராட்சி நிர்வாகத் துறையில் பணியாற்றி வரும் நூற்றுக்கணக்கான பணியாளர்கள், நிர்வாக அதிகாரி என்ற நிலைக்கு உயரும் தருணத்தில், தலைமைச் செயலாளர் முனைவர் வெ.இறை அன்பு ஐஏஎஸ்ஸின் ஒட்டுமொத்த வாழ்க்கையும், தனி மனித வாழ்வில் மட்டுமல்ல, அரசு பணியாளர் வாழ்விலும் ஏற்படுத்தியுள்ள மாற்றங்கள் குறித்து உணர்ச்சிப்பூர்வமான கருத்துகள், கூட்ட நிகழ்வில் பகிரப்பட்டிருக்கின்றன.

எண்ணற்றவர்களின் உணர்ச்சிப்பூர்வமான உரைகளை பட்டியலிடுவதற்குப் பதிலாக, ஒரே ஒரு இளம் அலுவலரின் உள்ளப்பெருக்கை மட்டும் சாட்சியாகப் பதிவு செய்கிறோம்.

தலைமைச் செயலாளர் தமது உரையை நிறைவு செய்து விடைபெற்ற பிறகு, பலர் தங்களுக்கு ஏற்பட்ட அனுபவங்களை பகிர்ந்து கொண்டுள்ளனர். அவர்களில் ஒரு இளைஞர், கல்லூரி படிப்பை முடித்து தமிழ்நாடு மாநில தேர்வாணையத்தின் குரூப் 4 தேர்வு மூலம் வெற்றி பெற்று அரசுப் பணியில் சேர்ந்துள்ளார்.

அவரின் உரைதான், ஒட்டுமொத்த கூட்டத்தையும் உலுக்கி உள்ளது.

பள்ளிப் படிப்பு முதலே வெ.இறை அன்பு ஐஏஎஸ்ஸின் உரைகள், நூல்களை வாசித்து வந்த அந்த இளைஞர், கல்லூரிப் படிப்பை முடித்து அவரைப் போலவே ஐஏஎஸ் அதிகாரியாகி, அவரது வழியிலேயே மக்களுக்குச் சேவை செய்ய வேண்டும் என்ற கனவு கண்டு, அதற்கா கடினமாக உழைத்து வந்திருக்கிறார்.

ஐஏஎஸ் தேர்வுக்கு தயாராகி வந்த நேரத்தில் குரூப் 4 மூலம் இளநிலை உதவியாளர் பணியில் சேர்ந்துள்ள அந்த இளைஞருக்கு, முனைவர் வெ.இறை அன்பு ஐஏஎஸ்தான் வாழ்வின் கதாநாயகர்.

இல்லற வாழ்க்கையில் அடியெடுத்து வைத்துள்ள அந்த இளம் தலைமுறை அரசு பணியாளர், தனது முதல் வாரிசுக்கு இறை அன்பு என்ற பெயரை சூட்டி, தனது மனதில் புதைந்து கிடக்கும் பக்தியை வெளிப்படுத்தியிருக்கிறார்.

தன் வாழ்நாளில் ஒருமுறையாவது வெ.இறை அன்பு ஐஏஎஸ் அவர்களை தரிசித்து விட வேண்டும் என்ற பேராசையுடன் வாழ்ந்து கொண்டிருப்பதையும், அந்த ஆசையில் 50 சதவீதம் காணொளி காட்சி மூலம் நிறைவேற்றிவிட்டதாகவும், கடினமாக உழைத்து ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற்று ஒருநாள் வெ.இறை அன்பு ஐஏஎஸ் முன் நிச்சயம் நிற்பேன் என்று உணர்ச்சி ததும்ப, ததும்ப இளம் அரசு அலுவலர் பேச, ஒட்டுமொத்த கூட்டமும் உணர்ச்சி பெருக்கில் தத்தளித்து இருக்கிறது.

வெ.இறை அன்பு ஐஏஎஸ்ஸின் 30 நிமிட உரையில் தெறித்த ஒவ்வொரு வார்த்தைகளிலும் சத்தியமே நிறைந்திருந்தது.

உதிர்க்கும் வார்த்தைகள் போலவே, அரசு பணியை மட்டுமல்ல தனிமனித வாழ்க்கையையுமே அறநெறியில் அமைத்திருக்கும் வெ.இறை அன்பு ஐஏஎஸ், அரசு அலுவலர்களுக்கு என்றைக்குமே ஒரு களங்கரை விளக்கமாகவே நின்று நெறி படுத்திக் கொண்டிருப்பார் என்று பயிற்சியில் ஈடுபட்டு வரும் அரசு பணியாளர் பலர் , உள்ளமெல்லாம் உணர்ச்சிப் பொங்க கூறினார்கள்.

பவானிசாகர் அரசு அலுவலர் பயிற்சி நிலையத்தில், காற்றோட்டமான வகுப்பறைகள், அனைத்து வசதிகளையும் உள்ளடக்கிய விடுதி அறைகள், கூட்டரங்கு, உடற்பயிற்சி மையம் என தமிழ்நாட்டில் வேறு எங்கும் காண முடியாத அளவிற்கு மிகச் சிறந்த பயிற்சி மையமாக இன்றைக்கு கம்பீரமாக காட்சியளிக்கும் பவானிசாகர் பயிற்சி நிலையத்தின் ஒவ்வொரு வளர்ச்சியும் வெ.இறை அன்பு ஐஏஎஸ்ஸின் முன்னெடுப்புகளால் மட்டுமே சாத்தியமாகி இருக்கிறது என்று பயிற்சி நிலைய அலுவலர்கள் தங்கள் மலரும் நினைவுகளையும் பகிர்ந்து கொள்கிறார்கள்.

அரசுப் பணியில் இருக்கும் போதே….வாழும் போதே…. தன்னலமற்ற பொதுச்சேவையை மனம் திறந்து பாராட்டும் பரந்த மனது நல்லரசுக்கு இருக்கிறது என்பதை வெளிப்படுத்தும் வகையில், தலைமைச் செயலாளர் முனைவர் வெ.இறை அன்பு ஐஏஎஸ்ஸின் காணொளி உரை மூலம் அருமையான தருணம் கிடைத்திருக்கிறது….

46 thoughts on “38 ஆண்டுகள்+3 மாத ஆட்சிப் பணி;ஓய்வுத் தேதி- வெ.இறை அன்பு ஐஏஎஸ் உருக்கம்…”
  1. Role model for me. Icon of young generation. Gift to Tamil society. Long live healthy and happily

  2. Ivar oru sirantha kathai aasiriyar, ilakanathil nalla thelivu prtravar, sirantha panbalar but thamilaga nithi valarchikum, valam valarchikum, paditha ilaingargalin thiramaiyai payanpaduthi thamilagsthinai valarchi pathaiyil kondu sellum vagayil nalla thittangal ivaridam irupathaga theriyavillai

  3. Dear Sir,
    You inspired many people in Tamilnadu. I am very proud to say that I am also one of the person in this group. I give many examples to my students about you only. God bless you. We pray God that we want to get many IAS like you. Thank you.

  4. In his second innings, we can expect more motivational books from this Author. Let the IRAI shower his choicest blessings on Irai Anbu Sir.

  5. Icon of all people he might be retired. But he is always working in hearts of all Tamil peoples

  6. நாட்டின் சிறந்த குடிமகன்களில்
    ஒருவரான ஐயா இறையன்பு இ.ஆ.ப அவர்கள் வாழ்க பல்லாண்டு.

  7. மிகவும் எளிமையானவர். மனித வள மேம்பாட்டிற்கு இவரை உதாரணமாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

  8. natarajanramanathan1947@gmail.com
    God bless you ???? sir. I personally wanted to meet you and thank you for your meritorious services. But my advanced age of 76 and few health problems prevent me from doing so.
    R. Natarajan. Formerly judicial sheridhtadar, vellore-632009.

  9. அற்புதமான மனிதர்.அரசுஊழியர்களுக்கு நல் வழிகாட்டி.லஞ்சம் ஊழல் மலிந்துள்ள அரசு நிர்வாகத்தில் இவரைப் போன்ற நேர்மையாளர்கள் பணியாற்றுவது மக்கள் மத்தியில் நம்பிக்கையை.ஊட்டுகிறது.

  10. 1977-ல் பவானிசாகர் பயிற்சி மையத்தின் 14Batch பயிறற்சியாளர் என்பதில் பெ.ருமை கொள்கிறேன். அன்றைய நிலை படு பயங்கரமாது. திரு பொன்னுசாமி அவர்கள் முநல்வர்.விடுதிள் ஆஸ்பெஸ்டோஸ் சீட்டுகளால் ஆனவை. 2மாத பயிற்சி. பாம்புள் நிறைந்த பகுதி அதை எல்லாம் புதுப்பித்த திருமிகு இறைன்பு ஐய்யா அர்கள் பெருக்கு ஏற்றவாறு செயலாற்றியமைக்கு மனமார்ந் நன்றிகளையும் இன்னும் தகவல் ஆணையராக பணியாற்ற வாழ்த்துகளையும் பணிவன்போடு சமர்பிக்கிறேன்.-.ப. நடராஜன் சேலமம்.11

    1. He is a role model for IAS cadre.
      He is a role model for young generation.
      He is a role model for budding writers.
      He is a role model for good Samaritan.
      Let us wait and see, the creation of his thoughts and actions in his retirement life.
      Regards,
      R.jayanandan

  11. Our oru Mahan neenda auyil nalam arokiyathudan Vala iraivanai pirarthippom

  12. இந்த மாண்புமிகு மனிதரை மக்களின் அன்பைப் பெற்றப் பண்பாளரை நாட்டின் உயரிய கெளரவ பதவியான ஜனாதிபதி பதவிக்கு பரிந்துரை செய்வதில் நாம் பெருமை கொள்வோம்

  13. Dr. Irai Anbu is a role model to all especially the younger generation must learn a lot from his life and the dedication and commitment to serve mankind where ever he was without any expectations. We salute you for all that you have done and being what you are. May you have a happy and healthy retired life perusing your dreams and hobbies and guiding the younger generation to travel in the right path serving the society. God bless you and your family ????????????????????????????????

  14. Most Respected Sir,
    You are a role model for this generation. Your simplicity, honesty, devotion and dedication to public life will always be remembered. I don’t think there will be anyone like you hereafter. A UNIQUE AND MASTERPIECE ARE YOU DEAR SIR. You have inspired millions including me. I was a great fan of your writings and proud of having known you Sir. The values you uphold, the commitment you show towards people’s welfare is highly commendable. It’s looks like a fairy tale. ????‍♀️
    I wish you a healthy and blessed retired life. You are just retiring from office . I am sure you won’t stop doing your best.
    Happy retired life SIR.

  15. இறை அன்பு பணி நிறைவு விழா பிரதமர் வருகை தந்து சிறப்பிக்க வேண்டும்.அப்துல் கலாம் போன்று மாணவர்கள் கலந்துரையாடல் நிறைய நிகழ்ச்சிகள் நடைபெற என் ஆவல்.

  16. Long Live Thiru Irai Anbu with hi s family.Though I would like to pray for his peaceful retired life, May God grant him many years of service to the country and Tamil Nadu.

  17. முனைவர் திரு.வெ.இறையன்பு IAS அவர்கள் ,அரசு உயர் அலுவலர்கள் மக்களுக்காக எங்ஙனம் பணிபுரிய வேண்டும் என்று சொல்லி யவர் மட்டும் அல்லர்.
    நடந்துகாட்டியவர்.
    அரசுப்பணியை
    இறை ப்பணியாக ஏற்றுக்கொண்ட வர்.
    ஓய்வின்றி உழைத்த
    தூய மனம் கொண்டவர்..
    “எல்லோரும் இன்புற்றிருக்க” எனும் அவர் எழுதிய நூலே சான்று.
    தாமரையால் குளமும்
    வெற்றி வீரனால் களமும்
    உயிர் தரும் பயிரால் நிலமும்
    பெருமை பெற்றது போல்
    உங்களால் மக்கள் நாங்கள் அனைவரும் பெருமை பெற்றோம் !!

    S. Ramamoorthy
    Administrative officer (Retd)

  18. முனைவர் திரு.வெ.இறையன்பு IAS அவர்கள் ,அரசு உயர் அலுவலர்கள் மக்களுக்காக எங்ஙனம் பணிபுரிய வேண்டும் என்று சொல்லி யவர் மட்டும் அல்லர்.
    நடந்துகாட்டியவர்.Your email
    அரசுப்பணியை
    இறை ப்பணியாக ஏற்றுக்கொண்ட வர்.
    ஓய்வின்றி உழைத்த
    தூய மனம் கொண்டவர்..
    “எல்லோரும் இன்புற்றிருக்க” எனும் அவர் எழுதிய நூலே சான்று.
    தாமரையால் குளமும்
    வெற்றி வீரனால் களமும்
    உயிர் தரும் பயிரால் நிலமும்
    பெருமை பெற்றது போல்
    உங்களால் மக்கள் நாங்கள் அனைவரும் பெருமை பெற்றோம் !!

    S. Ramamoorthy
    Administrative officer (Retd)

  19. A very valuable nd model IAS officer retires soon from Government services. An administrator of par Excellence. Lesson to all Government servants. He retires from Government services only due to age fixed. He will continue to serve humanity always. Tamilnadu saw an Wonderful chief secretary in him. May Almighty Bless him with full human age of 100years with all Fortunes, Happiness nd Best health nd energy to serve our Nation always. R.Rajagopalan, Mannargudi.

  20. Dear Sir,
    You are in the hearts of so many people,not only for Govt servants but for the common people to whom you hv done a lot for more than 38 glorious years .We are proud of ur parents, who gave a Golden SON like you, and let each & everyone should try to emulate and achieve remarkable feats.May GOD bless you and fulfill all ur wishes in the coming days sir.May you live for 100 more years and serve the society with ur kind words sir.

  21. இறையன்பு என்பவர்
    இதயத்தில் வாழ்பவர்
    குறையற்ற. மனிதராய்
    குவளயத்தில் வெல்பவர்
    உறவுக்குக் கைகொடுக்கும்
    உயரிய. பண்பாளர்…..
    என்றும் அன்புடன் பா…..சுகுமார்

  22. இறைவனுக்கே பணி ஓய்வா நான் அறிந்த வரை திரு இறையன்பு அவர்களின் மனமும் இறைவனின் மனமும் ஒன்று என்னை பொருத்தவரையில் அன்பான இறைவன் அவர் இறைவனின் அன்பு கிடைக்கப்பெற்ற இறையன்பு என்றும் அவர் நலமுடன் வாழ இறைவனை இறைஞ்சுகிறேன்

  23. Tamil Nadu government must identify good officers like you and fit into suitable positions. It is the need of the hour. Very proud of youIreaianbu sir.

  24. Sir
    I think the degree you got has been decorated with correct meaning of IAS (IRAIANBU ALIAS SERVICE), have a blessed life over 100 years Sir

  25. In the official machinery fficers like iron rust,
    Dr.Iraisnbu.is unparalleled officer in hierarchy that is gold, not to rust.
    He was a beacon light to brighten the paths of the poor
    He is an ever shining Star that directs the life of students
    His visit and speech to our Muthialpet HSS was unforgettable.Mow the news of his retirement a shock.regrettabl.
    No one can remove him and service from our heart and mind.
    All credit goes to our CM picked up the matchless jewel to adorn his Govt.
    Long live both of them!

  26. One of the inspiration to all and my first role model person..and I regret to inform you that the retirement of Dr.Iraiyanbu I.A.S.from the post of Chief Secretary is a great loss to Tamil Nadu

  27. Fantastic Man he is. இவரது உடன் பிறந்த பண்பான “கடின உழைப்பு, தன்னம்பிக்கை, விடா முயற்சி” ஆனது வளரும் சமுதாயத்திற்கு ஒரு நல்ல எடுத்துக்காட்டாக விளங்குகிறது. நானும் மேலே ஒரு நண்பர் கூறியது போல் இவரது தொண்டு தமிழ்நாடு உடனே முடியாமல் இந்தியாவிற்கே ஓர் எடுத்துக்காட்டாக விளங்க வேண்டும் எனில் நமது நாட்டின் ஜனாதிபதி பதவிக்கு அவருடைய பெயரை பரிந்துரைப்பதே அவருக்கு நாம் தற்பொழுது செய்யும் மரியாதையாகும். மாண்புமிகு திரு இறையன்பு ஐயா அவர்கள் உடல் நலம் நீள் ஆயுள் நிறை செல்வம் உயர் புகழ் மெய்ஞானம் ஓங்கி வாழ எல்லாம் வல்ல இறைவனை மனமார வேண்டி பிரார்த்திக்கிறேன்.
    இப்படிக்கு
    தங்கள் கீழ் பணிபுரிந்து தொழில் வணிகத் துறையின் கீழ் ஓய்வு பெற்ற சு. இராமச்சந்திரன் இணை இயக்குனர் (பொறியியல்) ஓய்வு

  28. மிக சிறந்த மனிதர் ,அதிகாரி மனிதநேயம் மிக்கவர் ,இன்முகதிர்க்கு சொந்தகாரர்,எதையும் ஆராய்ந்து செயல் படுபவர்,நேர்மை என்ற சொல்லுக்கு உரியவர் காலம் நேரம் பார்காதவர்பண்முக காரர், மேல் கண்ட அண்ணைதிக்கும் உரிமை உள்ளவர்.நானும் அவரிடத்தில் பணி செய்தேன் என்று நினைக்கும் பொழுது மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். ஒய்வு என்ற வார்த்தை அவரின் அகராதியில் இல்லை.நன்றி.

  29. Excellent personality with a vision to make perfect younger generation

  30. வாழ்த்துக்கள், ஐயா. நீங்கள் எனக்கு ஒரு முன்மாதிரி. உங்களைப் போன்றே நேர்மையும், கடின உழைப்புமே எனது தாரக மந்திரம். 6/2007 ல் பணியிலிருந்து ஓய்வு பெற்றுவிட்டாலும், சேவை தேடி வருபவர் களிடம் நான் காட்டிய அந்த நேர்மையும் கடினஉழைப்பும் இன்று எனக்கு நல்ல உடல்நலத்தை இறைவன் அளித்து க்கொண்டிருக்கிறார்.நீங்களும் நல்ல உடல் நலத்துடன் நீடூழி வாழ்ந்து சமூகப்பணி ஆற்றிட வேண்டுகிறேன்

  31. நீங்கள் பலருக்கும் முன்னுதாரணம் sir.உங்களது சேவையை என்றும் நாங்கள் நினைவில் கொள்வோம்.take care of ur health sir.

  32. அய்யா அவர்கள் நாகை துணை ஆட்சியராக பணிபுரிந்த காலத்தில் குடவாசல் வட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணியாற்றியது எனது அமைச்சுப்பணியில் பதிவேடுகள் & வரைவுகளினை நேர்த்தியாக கையாண்டமைக்கு பாராட்டி அலுவலகத்திலேயே தன் கைவண்ணத்துடன் கூட்டிய பாராட்டு நற்சான்றினை வழங்கியது இந்த தருணத்தில் மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.
    எனது மாவட்ட மாறுதலினை மன வருத்தத்துடன் ஏற்பளிப்பு செய்தது இன்றும்எனது மனதில் பசுமையாக உள்ளது.
    உழைப்பு உயர்வு நேர்மையின் சிகரம் வாழ்த்தி வணங்குகிறேன்
    சுப ஸ்ரீ நிவாஸன்*
    வட்டாட்சியர்(ஓய்வு)
    கும்பகோணம்.

  33. Happy retired life Sir.May God bless you with good health and peaceful life.I.have been following your work and service through reports in the media and the people in TN Govt service and public in general and feel that you are an asset to the State and have done invaluable contribution to all by your hard work,honesty throughout the last 38 years and 3 months.May your tribe increase.

  34. The very best IAS Officer, I have ever seen in my govt service carrer.

  35. நீன்ட நாள் நலமுடன் வாழ‌ வாழ்த்துக்கள் ஐயா.மிகச்சிறந்த பேச்சாளர், எழுத்தாளர், நல்ல கவிஞர் ‌‌பன்முகதிறமை கொண்டவர்.தமிழ்‌நாட்டு மக்களுக்கு ஐயாவின் சேவைகள் போற்றுதலுக்குரிய ஒன்றாகும்.மென்மேலும்ஐயா பனி‌ தொடர வாழ்த்துக்கள்.

  36. Sir
    Before retirement
    May advice CM TN TO SANCTION
    RETIRED TN TRANSPORT STAFF DA
    WITH ARREARS THEREON SINCE ALL
    ARE AGED MORE THAN 70 TO 75 YEARS
    STRAUSS STRAINS ARE UNLIMITED
    I HOPE YOU WILL REALISE AGED PEOPLE PROBLEMS
    DO FAVOUR BEFORE RETIREMENT FROM CHIEF SECRETARY TO GOVT OF TN
    GOD BLESS YOU
    J.VIJAYAKUMAR
    9840701747
    RETIED SUPT TN TRANSPORT CORPORATIIN
    PENSIONER
    DO RETIREMENT 30.06.2011
    DATE OF APPOINTMENT 10.10.1976
    PALLAVAN HOUSE
    CHENNAI 600 002

  37. Sir

    God bless you

    Do favour to tn transport corporation
    Retired pensioner DA

    Accordingly guide CM TN at an early

  38. Sir

    Prolong problems of non getting DA for

    Retired transport corporation employees

    Request you to inform the matter to
    CM TN

    Ask him to do favour our request before retirement

    I hope you will do needful

    Thanking you

    Vijayakumar j
    9840701747

  39. புது சாலைகள் அமைக்கப்படும் போது பழைய சாலைகளை அகற்றிவிட்டு அதே மட்டத்தில் புது சாலைகள் அமைக்கப்பட வேண்டும் என்று நமது தலைமை செயலாளர் திரு.இறையன்பு ஐ.ஏ.ஸ் அவர்களின் வலியுறுத்தலின் பேரில் கடந்த 2ஆண்டுகளில் பல சாலைகள் தமிழ்நாட்டில் போடப்பட்டுள்ளன.இதனால் வலிமை மிக்க வீடுகள் பல ஆண்டுகள் கடந்தாலும் சாலையை விட தாழ்ந்து போகாமல் நிலைக்கும்.இந்த நடைமுறை மேலை நாடுகளிலும் நமது நாட்டில் புதுச்சேரி மாநிலத்தில் மட்டுமே பின்பற்றப்பட்டு வருகிறது. அவரது புத்தகங்களும் உரைகளும் பல பேருக்கு வழிகாட்டி.ஓய்வு என்பது அவரைப் பொறுத்த மட்டில் அரசுப் பணிக்கு மட்டுமே.

  40. ஓய்வு பெறுவதட்கும் ஒரு விளம்பரமா!

Comments are closed.