Thu. Mar 28th, 2024

இஸ்லாமிய அரசியலில் ஆணாதிக்கத்திற்கு சம்மட்டி அடி!
முண்டாசு கவிஞரின் புரட்சி பெண்ணாக முழங்கும் தன்வீரா பேகம்…..

பொது வாழ்வில் பெண்கள் ஆர்வம் காட்டுவதை அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களுமே விரும்புவதில்லை.. சமத்துவத்தை நூற்றாண்டுகளுக்கு முன்பே நிலைநாட்டிய தமிழகத்தில் இன்றைக்கும் கூட மகளிர் துணிந்து அரசியல் மற்றும் பொதுத் தளங்களில் களமாடுவது என்பது கடும் போராட்டமாகதான் இருந்து வருகிறது..அதுவும் உள்ளாட்சி மன்ற தேர்தல்களில் 50 சதவீதத்திற்கும் மேல் மகளிருக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு ஆடவருக்கு இணையாக மகளிரும் வெற்றி பெற்று உள்ளாட்சி மன்றங்களை அலங்கரித்தாலும் கூட அன்றாட பணிகளில் பெண் உறுப்பினருக்கு பதிலாக அவரது கணவர்கள் தான் தர்பார் செய்து வருகிறார்கள் என்பது தான் பொதுவான குற்றச்சாட்டு..பொதுவுடைமை கட்சியினரைக் கடந்து ஆளும் கட்சி முதல் அனைத்து கட்சிகளிலும் பெண் உறுப்பினர்களின் நிலை பரிதாபத்திற்கு உரியது தான்..
ஆனால், மதக் கோட்பாடுகளில் தீவிரமாக இருக்கும் இஸ்லாத்தில் ஊன்றி போய் இருக்கும் ஆண் அரசியல்வாதிகளை அலற விட்டு வருகிறார் பேரணாம்பட்டைச் சேர்ந்த உள்ளாட்சி
மன்ற பெண் உறுப்பினரான தன்வீரா பேகம்
..
மகாகவி பாரதியார் உருவகப்படுத்தும் புரட்சி பெண்ணுக்குரியவராக முன்மொழியப்படும் பேகத்தின் சாதனை தான் ❓

சிப்பாய் கலகத்தால் தேசிய அளவில் முக்கியத்துவம் பெற்றது,
வே லூர் மா வட்டம்..இதன் ஒரு பகுதியாக உள்ளது, பே ரணா ம்பட்டு நகராட்சி..இதன் நிர்வாகத்தின் கீழ் உள்ள 6வது வார்டு கவுன்சி லராக இருப்பவர், இந்தி ய யூனி யன் முஸ்லி ம்
லீ க்கை ச் சே ர்ந்த தன்வீ ரா பேகம். இயல்பிலேயே முற்போக்கு சிந்தனை கொண்டவர்..
இவரது வார்டிலுள்ள ரங்கம்பே ட்டை கானாற்றை தூர்வாரும் பணி கடந்த 22 ஆம் தேதி நடைபெற்றது.. வழக்கம் போல நல்லது நடந்தால் சுயநலவாதிகளுக்கு பிடிக்காது அல்லவா..அந்த வகையில்
பொக்லைன் இயந்திரத்தை பயன்படுத்தியதற்கா க, அதனுடைய டிரைவரை நகரா ட்சி துணை த்தலை வர்
ஆலியார் ஜுபே ர் அஹ்மது மிரட்டியுள்ளார்..அந்த டிரைவர் பயந்து போய் தன்வீரா பேகத்திடம் கண்ணீர் சிந்தி உள்ளார்.

தன்னுடைய மதத்தைச் சேர்ந்தவரே மக்கள் பணிக்கு இடையூறு விளைவிக்கிறாரே என்ற ஆத்திரத்தில் வீர மங்கை யாக அரிதாரம் பூண்டு வீ டியோ ஒன்றை பதிவு செய்து வாட்ஸ் அப்பில்
வெ ளியிட, வேலூர் மாவட்டத்தில் தீ பற்றிக் கொண்டது..
‘நகரா ட்சி நிதியில் வாங்கப்பட்ட பொக்லைன் இயந்தி ரத்தை , அனைத்து
கவுன்சிலர்களும் உபயோகப்படுத்த உரி மை உண்டு. அப்படி இருக்கையில் சர்வாதிகாரி போல
கேள்வி கேட்க ஆலியார் ஜு பேர் யார்? பொக்லைன் இயந்திரம் அவர் வீட்டுச் சொத்தா ? என்று ஆவேசம் காட்டிய சூட்டின் வெப்பம் பேரணாம்பட்டு அரசியல் வாதிகளிடம் விவாதமாகி இருக்கிறது..அதுவும் இஸ்லாமிய ஆண் அரசியல்வாதிகள் ஆடிப் போய் இருக்கிறார்கள்…

இன்றைக்கும் சமூக வலை தளங்களில் சூட்டை கிளப்பிக் கொண்டிருக்கிறது பேகத்தின்
அனல் கேள்விகள்…
வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய
மாவட்டங்கள் மட்டுமின்றி, உள்ளாட்சி அமைப்புகளில் பதவி வகித்து வரும் மகளிர் உறுப்பினர்களிடம் பேகத்தின் சில விநாடி வீடியோ பதிவு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது…

பேகத்தின் சீற்றம் யாரை எதிர்த்து? விரிவாக பார்ப்போம்…

பேரணாம்பட்டு நகராட்சி தலைவர் பதவி , மகளி ர் (பொ து)
ஒதுக்கப்பட்டிருந்தது. இந்த பதவியை திமுக கைப்பற்ற வேண்டும் என்பது மேலிடத்தின் உத்தரவு…திமுகவின் கூட்டணியில் உள்ள இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு (ஐயூஎம்எல்) போதிய வார்டுகளை உள்ளூர் திமுக ஒதுக்க விலை..இதனால் வெற்றி வாய்ப்பு உள்ள வார்டு களில் ஐயூஎம்எல் பிரமுகர்கள் போட்டியிடலாம் என சுதந்திரம் வழங்கப்பட்டது.. 6வது வா ர்டில் திமுக நகரச் செயலாளர் ஆலியார் ஜு பேரின் மனைவி ஐசா சித்திகா நிறுத்தப்பட்டிருந்தார்.


அவரை எதிர்த்து போ ட்டியிட்டுதான், தன்வீர் பேகம் வெ ற்றி பெ ற்றா ர்.
தி .மு.க., நகர செ யலரா க இருந்தும், ஆலி யா ர் ஜு பே ர் தனது மனை வி யை வெ ற்றி பெ ற வை க்க முடியவி ல்லை .
இதனா ல், நகரா ட்சி தலை வரா க பி ரே மா பதவி ஏற்க மனைவியால் ஏற்பட்ட இழப்பை ஈடுசெய்ய துணை த்தலைவர் பதவியை ஆலி யா ர் ஜு பே ர் அஹமத் பிடித்து கொண்டார்..
ஆளும்கட்சியாக திமுக உள்ள நிலையில் நகராட்சி தலைவர் பதவி கைவிட்டு போன விரக்தியில் இருந்து வரும் ஜுபேர் அரசியல் வன்மத்தோடு ஜென்ம எதிராக பேகத்தை பார்ப்பதால் பொக்லைன் விவகாரம் விஸ்வரூபம் எடுத்து நிற்கிறது..கூட்டணி கட்சிகளிடையே கொதி நிலை உருவாகி இருப்பதால் நகராட்சி கவுன்சி லர் தன்வீ ரா பே கத்தை அடக்கி வா சி க்கும்படி, அவர் சார்ந்தி ருக்கும் இந்திய
யூனி யன் முஸ்லீ க் கட்சி யின் தமிழக தலைமை அறிவுறுத்தி இருப்பதாக முணுமுணுக்கப்படுகிறது…

சூட்டை கிளப்பிய கொதி தண்ணீரை குளுமைப்படுத்த ஐயூஎம்எல் துடிதுடித்து நமத்தும் கறிகட்டையாகவும் பார்க்கப்படும் ஜுபேர், தன்னுடைய பதவிக்கு ஆபத்து வந்துவிடுமோ , தி .மு.க., தலை மை நடவடிக்கை எடுக்குமோ என
ஆலி யா ர் ஜு பே ர் அஹமத் பயத்தி ல் இருப்பதாகவும் புலம்புகிறார்கள் உள்ளூர் உடன்பிறப்புகள்..

தலைவர்கள் பிறப்பதில்லை.. காலமும் பிரச்னைகளும் தான்
உருவாக்குகின்றன.. ஆணாதிக்க அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க களம் கண்ட பேகம், அரசியல், அதிகார திமிரு க்கும் அஸ்திவாரம் கட்ட வேண்டும் என்பது பேரணாம்பட்டு மக்களின் ஒட்டுமொத்த எதிர்பார்ப்பு….