Tue. Dec 3rd, 2024

இந்தியாவின் 15 வது குடியரசுத் தலைவராக திரௌபதி முர்மு கடந்த ஜூலை 25 ஆம் தேதி பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்ட மத்திய அமைச்சர்கள் நாள்தோறும் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இதேபோல, குடியரசுத் தலைவரின் நேரடி தலைமையை ஏற்று செயல்படக் கூடிய மாநில ஆளுநர்களும் புதுடெல்லியில் குடியரசுத் தலைவர் மாளிகைக்கு படையெடுத்து குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வரிசையில், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி (ஆக.6.ம்தேதி)தெலுங்கானா மற்றும் புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் (ஆக.6.ல்)மணிப்பூர் மற்றும் மேற்கு வங்க மாநில ஆளுநர் இல.கணேசன் (ஆக.6.,ல்)உள்பட பல மாநில ஆளுநர்கள் குடியரசுத்தலைவரை சந்தித்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.


இதேபோல், பாஜக மாநில முதல்வர்கள், எதிர்க்கட்சியைச் சேர்ந்த முதல்வர்கள் ஆகியோரும் டெல்லிக்கு பயணம் மேற்கு கொண்டு குடியரசுத்தலைவரை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வரிசையில், முதல் அமைச்சர்களில் முதல் நபராக ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை ஆகஸ்ட் 5 ல் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.

அதேநாளில் பாஜகவின் பரம வைரியான திரிணாமுல் காங்கிரஸ் கட்சித் தலைவரும் மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி குடியரசுத்தலைவரைச் சந்தித்து பூங்கொத்து வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.

3 வதாக திரிபுரா முதல்வர் மாணிக் சாகா ஆகஸ்ட் 6 லிலும் அதேநாளில் காங்கிரஸைச் சேர்ந்த சட்டீஸ்கர் முதல்வர் பூபேஸ் பகலும், 5 வதாக கோவா முதல்வர் பிரமோத் ஷாவந்த்தும், ஆகஸ்ட் 8 ல் உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமியும், புதுச்சேரி முதல்வர் என்.ரங்கசாமி ஆகஸ்ட் 9 ஆம் தேதியும் முறையே குடியரசுத்தலைவர் திரெபதி முர்முவை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.

பாஜக சார்பில் அடுத்த பிரதமர் வேட்பாளராக அடையாளப்படுத்தப்படுபவரும் உத்தரப் பிரதேச முதல்வருமான யோகி ஆதித்யநாத், ஆகஸ்ட் 10 ம் தேதி குடியரசுத்தலைவரை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.
முதல் அமைச்சர்கள் வரிசையில் 9 வது மாநிலமாக தமிழ்நாட்டின் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று குடியரசுத் தலைவர் மாளிகையில், இந்தியாவின் 15 வது குடியரசுத் தலைவரான திரெபதி முர்முவுக்கு பூங்கொத்து வழங்கி வாழ்த்து தெரிவித்தார். இந்த சந்திப்பின் போது திமுக எம்பி டி.ஆர்.பாலு, தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் முனைவர் வெ.இறையன்பு ஐஏஎஸ் ஆகியோரும் உடனிருந்தனர். நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு உள்ளிட்ட தமிழக நலன் சார்ந்த பல்வேறு கோரிக்கைககள் அடங்கிய மனுவையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் குடியரசுத் தலைவரிடம் வழங்கினார்.

இந்தியாவில் 28 மாநிலங்கள், 8 யூனியன் பிரதேசங்கள் என மொத்தம் 36 மாநிலங்கள் உள்ள நிலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை உள்ளடக்கி இதுவரை 9 முதல்வர்களே டெல்லி சென்று குடியரசுத்தலைவரை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
வாழ்த்து தெரிவித்த 9 முதல்வர்களிலும் பாஜக அல்லாத முதல்வர்கள் என்ற வரிசையில், 5 முதல்வர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். குடியரசுத் தலைவரின் சொந்த மாநிலமான ஓடிசாவைச் சேர்ந்த முதல் அமைச்சர் பிஜு பட்நாயக் இதுவரை டெல்லி சென்று குடியரசுத்தலைவருக்கு நேரில் வாழ்த்து தெரிவிக்கவில்லை. தென்னிந்தியாவைப் பொறுத்தவரை, கேரளம், கர்நாடகம், ஆந்திரம், தெலுங்கானா ஆகிய 4 மாநிலங்களின் முதல்வர்களும் குடியரசுத் தலைவருக்கு நேரில் வாழ்த்து தெரிவிக்கவில்லை.

இரண்டு நாள் பயணமாக நேற்று இரவு டெல்லி சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின், குடியரசுத் தலைவரை சந்திப்பதற்கு முன்பாக குடியரசுத் துணைத் தலைவர் ஜகதீப் தன்கரையும் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். இன்று மாலை பிரதமர் மோடியை சந்திக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழக நலன் சார்ந்த கோரிக்கைளை வழங்கி, விரைந்து நிறைவேற்ற வேண்டும் என கோரிக்கை விடுக்கவுள்ளார்.

One thought on “குடியரசுத் தலைவருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் வாழ்த்து.. டெல்லி, மேற்கு வங்கம் வரிசையில் தமிழ்நாடு 9 ஆம் இடத்தை பிடித்தது.”

Comments are closed.