நெக்டர் என்ற தனியார் நிறுவனத்தின் தலைவர் ரம்யா ராமச்சந்திரன் ஏற்பாட்டில் சர்வதேச தாய்ப்பால் தினம் சென்னையில் கொண்டாடப்பட்டது.
நிகழ்வில் சிறப்பு அழைப்பாளர்களாக கூட்டுறவு, உணவு நுகர்வோர் பாதுகாப்புத்துறை செயலாளர் மருத்துவர் ஜெ.ராதாகிஷ்ணன் ஐஏஎஸ், மாநில குழந்தைகள் பாதுகாப்பு ஆணையத்தின் உறுப்பினர் சரண்யா ஜெயக்குமார், நடிகர் நகுலின் மனைவி ஸ்ருதி நகுல், ஜி.வி.பிரகாஷ் மனைவி சைந்தவி, இளையராஜாவின் கிடாரிஸ்ட் சதானந்தம் ஆகியோர் பங்கேற்றனர்.
தாய்ப்பால் முக்கியத்துவத்தை உணர்த்தும் விதமாக உயிர்த்துளி என்ற விழிப்புணர்வு பாடல் வெளியிடப்பட்டது.

இதை உணவுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ் வெளியிட்டார். இந்த விழிப்புணர்வை பாடலை இசையமைப்பாளர் அசோக் ஸ்ரீதரன் இயற்றியுள்ளார்.
நிகழ்வில் பேசிய ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ், “ஆகஸ்ட் 1ம் தேதி முதக் 7ம் தேதி வரை சர்வதேச தாய்ப்பால் தினம் கொண்டாடப்படுகிறது. முதன் முதலில் குழந்தைக்கு கிடைக்கும் உணவு தான் தாய்ப்பால். தற்பொழுது தமிழகத்தில் தாய்ப்பால் குறித்த விழிப்புணர்வு அதிகரித்துள்ளது. பிரசவத்தின் போது தாய்மார் இறப்பு சதவிகிதம் குறைவு, தாய் சேய் நலன் உள்ளிட்ட அம்சங்களில் தமிழகம் முன்னோடி மாநிலமாக உள்ளது.
அரசின் முக்கிய நோக்கம்
அனைவருக்கும் சத்தான உணவு வழங்குவதே அரசின் முக்கிய நோக்கமாக உள்ளது. அதனால் ஒவ்வொரு குழந்தைக்கும் சத்தான உணவு கிடைக்க வேண்டும் என்பதில் அரசு கவனம் செலுத்தி வருகிறது.
குழந்தை பிறந்து வளர்ந்து கிடைக்கும் சத்தான உணவை காட்டிலும், பிறக்கும் போதே குழந்தைகளுக்கு கண்டிப்பாக தாய்ப்பால் கொடுக்க வேண்டும். அதுதான் குழந்தையின் ஆரோக்கியத்தை பாதுகாக்கும்.

1992ம் ஆண்டுகளுக்கு முன்பு தாய்ப்பால் கொடுக்க பெண்கள் தயங்கினர். அதனால் தான் சர்வதேச தாய்ப்பால் தினம் மூலம் விழிப்புணர்வுகள் ஏற்படுத்தி வருகிறோம். குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து உணவு கிடைப்பது மிகப்பெரிய சவாலாக உள்ளது. ஹீமோகுளோபின் அளவும் சரியாக இருப்பதில்லை. இதற்காக தான் குழந்தையின் முதல் உணவான தாய்ப்பால் கொடுக்க அறிவுறுத்தப்படுகிறது.
பிரசவத்திற்கு பிறகு, தாய்ப்பால் கொடுக்கவில்லை என்றால் பாதிக்கப்படுவது அந்த தாயும், குழந்தையும் தான்.
விகிதம் அதிகரிப்பு…
சர்வதேச அறிக்கையின்படி, 1950களில் தாய்ப்பால் கொடுக்கப்பட்டதை காட்டிலும் 2021 ஆண்டில் தாய்ப்பால் கொடுக்கும் விகிதம் தமிழகத்தில் அதிகரித்துள்ளது. குழந்தைன் பிறந்த ஒருமணி நேரத்திற்குள் தாய்ப்பால் கொடுக்கும் விகிதம் 54% இருந்து 60% ஆக உயர்ந்துள்ளது. 6 மாதம் வரை தாய்ப்பால் கொடுப்பவர்களின் விகிதம் 48% இருந்து 55.1% ஆக உயர்ந்துள்ளது. கொரோனா காலத்தில்44.9% தாய்மார்கள் தாய்ப்பால் கொடுப்பதை தவிர்த்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
உலகளவில் சர்வதேச நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு வருகிறோம். அதனால், குழந்தைகளை பாதுகாக்க தாய்ப்பால் முக்கியமானது. பாதிக்கப்பட்ட குழந்தைக்கும், தாய்ப்பால் கிடைக்காத குழந்தைக்கும் தாய்ப்பால் உள்ளவர்கள் தாமாக முன் வந்து தானம் செய்யலாம். தாய்ப்பாலை சேகரிக்கும் 20க்கும் மேற்பட்ட வங்கிகள் உள்ளன. தாய்ப்பால் தானம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.
தாய்ப்பால் கொடுக்க தனி அறை ஒதுக்கப்பட்டால் அந்த தாய்க்கும், குழந்தைக்கும் ஒரு உன்னதமான உறவு ஏற்படும். தாய்ப்பால் கொடுப்பது இயற்கையான நிகழ்வு. அதை கொடுக்க தயங்க கூடாது. அதேநேரம் பொது சுகாதாரம் என்பதும் மிக முக்கியம். அதன் மீதும் கவனம் செலுத்த வேண்டும்.
இவ்வாறு டாக்டர் ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ் கூறினார்.
நிறைவாக, ஸ்ருதி நகுல், சைந்தவி ஆகியோர் தாய்ப்பால் குறித்த தங்களது அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.
Itís nearly impossible to find experienced people on this subject, but you sound like you know what youíre talking about! Thanks