கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள டி.என்.பாளையத்தில் தி.மு.க.தலைவர் மு.க.ஸ்டாலின் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். அப்போது அவர் கூறியதாவது
அசாம்,கேரளாவில் மக்கள் மீதான சுமையை குறைக்க, அந்தந்த மாநில அரசுகள் பெட்ரோல், டீசல் மீதான வரியை குறைந்திருக்கின்றன. ஆனால், தமிழக அரசு, வரியை குறைக்காமல் மத்திய அரசுடன் இணைந்துக் கொண்டு தமிழக மக்களை வதைக்கிறது.
பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வலியுறுத்தி மாநிலம் முழுவதும் தி.மு.க. கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்திக் கொண்டிருக்கிறது.
கச்சா எண்ணெய் விலை ஏற்றத்தால்தான் பெட்ரோல், டீசல் விலை உயர்கிறது என்று கூறுகிறது மத்திய அரசு. ஆனால்,தற்போது கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ள நிலையிலும், உயர்த்தப்பட்ட விலையை குறைக்க மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மத்திய அரசோடு கூட்டணி அமைத்து மக்களை வஞ்சித்துக் கொண்டிருக்கும் அ.தி.மு.க. அரசை அகற்றும் காலம் வெகு தொலைவில் இல்லை.
இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.