Sat. May 18th, 2024

வரும் 11 ஆம் தேதி நடைபெறவுள்ள அதிமுக பொதுக்குழுவுக்கு தடை விதிக்க கோரி ஓ.பன்னீர்செல்வம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு, சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன்பு இன்று பிற்பகலில் விசாரணை துவங்கியது.

ஓபிஸ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் தங்கள் தரப்பு வாதத்தை முன் வைத்தனர். இடைஇடையே நீதிபதி சில கேள்விகளை எழுப்பினர்.

அதன் விவரம்:

ஜூலை 11 பொதுக்குழு கூட்டத்துக்கு அனுப்பப்பட்ட நோட்டீஸ் செல்லுமா? என்பது தான் இந்த வழக்கு என்று ஓபிஎஸ் வழக்கறிஞர் வாதாடினார்.

ஜூன் 23ம் தேதி நடந்த பொதுக்குழுவின் நீட்சிதான் வரும் 11ம் தேதி நடக்க உள்ள பொதுக்குழுவா? என்று நீதிபதி கேள்வி எழுப்பினார்.

அந்த கூட்டம் தனி, இந்த கூட்டம் தனி என ஓ.பி.எஸ். தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

ஒருங்கிணைப்பாளர்கள் பதவிக்கு அங்கீகாரம் அளிக்கப்படாததால், அவர்கள் செயல்பட முடியாது என்று கூறுவதை ஏற்க முடியாது; அன்றைய பொதுக்குழுவில் அந்த விவகாரமே எடுக்கப்படவில்லை என்றும் தலைமை நிலைய நிர்வாகிகள் என்ற பெயரில் பொதுக்குழுவுக்கு அழைப்பு விடுவிக்கப்பட்டுள்ளது. ஆனால், அப்படி ஒரு பதவியே இல்லை என்றும் ஓபிஎஸ் தரப்பு வாதாடியது.

மேலும், கட்சி விதிகளில் பொதுக்குழுவை கூட்ட ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர்க்கு மட்டுமே அதிகாரமே உள்ளது என்றும் கூறினார்கள்.

ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் செயல்பட முடியாவிட்டால் கட்சி செயல்படாதா? என்று நீதிபதி கேள்வி எழுப்ப, அதுபற்றி கட்சி விதிகளில் எதுவும் தெரிவிக்கப்படவில்லை; இடைக்கால பொதுச் செயலாளரை தேர்வு செய்யவே இந்த பொதுக்குழு கூட்டம் என்று ஓ.பி.எஸ். தரப்பு தெரிவித்தது.

ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளருக்கு அதிகாரம் இல்லாத போது, யார் பொதுக்குழுவை கூட்ட அதிகாரம் படைத்தவர்? என்று நீதிபதி கேள்வி எழுப்ப, ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளராக இருவரும் தேர்வு செய்யப்பட்டதற்கான வெற்றி படிவம் வழங்கப்பட்டு, அது தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது; இது தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது என்று ஓ.பி.எஸ். தரப்பில் பதில் அளிக்கப்பட்டது.

ஒருங்கிணைப்பாளர்களுக்கு 2026 வரை பதவிக்காலம் உள்ள நிலையில் அனைத்து விதிகளையும் புறந்தள்ளியுள்ளனர் என்றும் ஓ.பி.எஸ். தரப்பு வாதிட்டது.

தொடர்ந்து இபிஎஸ் தரப்பு வழக்கறிஞர்கள் தங்கள் தரப்பு வாதத்தை முன்வைத்து வாதிடடனர்.

ஒருங்கிணைப்பாளர்கள் பதவிகளை கலைத்து தற்காலிக பொதுச்செயலாளரை தேர்வு செய்ய திட்டமிடப்பட்டு, அதன் பின் பொதுச்செயலாளர் தேர்தல் நடத்தப்படும்.

பொதுச்செயலாளர் தேர்தலில் ஓ.பி.எஸ் உட்பட யார் வேண்டுமானாலும் போட்டியிடலாம்.

இவ்வழக்கில் பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் செய்ய வேண்டும், பொதுக்குழு கூட்டம் நடத்தப்பட வேண்டும், பின்னர் மற்றவை குறித்து தீர்மானிக்கலாம்.

ஓ.பன்னீர் செல்வத்துக்கு நோட்டீஸ் கொடுக்கவில்லை, அழைப்பிதழ்தான் வழங்கப்பட்டுள்ளது.

ஒருங்கிணைப்பாளர்கள் பதவிகளை கலைத்து தற்காலிக பொதுச்செயலாளரை தேர்வு செய்ய திட்டமிடப்பட்டு, அதன் பின் பொதுச்செயலாளர் தேர்தல் நடத்தப்படும்.

பொதுச்செயலாளர் தேர்தலில் ஓ.பி.எஸ் உட்பட யார் வேண்டுமானாலும் போட்டியிடலாம்..

இவ்வழக்கில் பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் செய்ய வேண்டும், பொதுக்குழு கூட்டம் நடத்தப்பட வேண்டும், பின்னர் மற்றவை குறித்து தீர்மானிக்கலாம்.

ஓ.பன்னீர் செல்வத்துக்கு நோட்டீஸ் கொடுக்கவில்லை, அழைப்பிதழ்தான் வழங்கப்பட்டுள்ளது என்று எடப்பாடி தரப்பில் வாதிடப்பட்டது.

இதனையடுத்து ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிப்பாளர் பதவிகள் காலாவதி ஆகிவிட்டதா? பொதுக்குவை கூட்ட தலைமைக் கழக நிர்வாகிகளுக்கு அதிகாரம் உள்ளதா பொதுக்குழு நோட்டீசில் கையெழுத்திடுவது யார் உள்ளிட்டவற்றுக்கு விரிவான பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என எடப்பாடி தரப்புக்கு உத்தரவு பிறப்பித்த உயர்நீதிமன்ற தனி நீதிபதி, வழக்கு விசாரணை நாளை மாலை 2.15 மணிக்கு நடைபெறும் என ஒத்திவைத்தார்.