புதுசசேரியில் 24 மணிநேரத்திற்கு மேலாக பெய்த கனமழையில் பெண் ஒருவர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டார்.
ஆந்திர மாநில ஆளுநரான தமிழிசை சவுந்தரராஜன், கடந்த சில தினங்களுக்கு முன்பாக புதுச்சேரி மாநில துணை ஆளுநர் பொறுப்பையும் கூடுதலாக ஏற்றுக் கொண்டார்.
பதவியேறற நாள் முதல் புதுச்சேரியில் உள்ள ஆளுநர் மாளிகையிலேயே தங்கியிருந்து, அம்மாநில வளர்ச்சிக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கி வருகிறார்.
கடலூர், புதுச்சேரி பகுதிகளில் தொடர் மழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி மேட்டுப்பாளையம் பகுதியில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் பேகம் என்ற பெண் அடித்து செல்லப்பட்ட நிகழ்வு, பொதுமக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தொடர் மழையினால், புதுச்சேரி நகர் முழுவதும் வெள்ள நீர் சூழ்ந்திருப்பதாக தகவல் கிடைத்தவுடன் களத்தில் குதித்தார் துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன்.
புதுச்சேரியில் உள்ள பல்வேறு பகுதிகளை ஆய்வு செய்ய புறப்பட்ட துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், மழைவடிகால் பகுதிகள் விரைந்து சீரமைத்து தேங்கி நிற்கும் மழை நீரையை உடனடியாக அகற்ற வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
தொடர்ந்து, மழை நீரோடு கழிவு நீர் தேங்கியிருக்கும் பகுதிகளையும் பார்வையிட்ட துணை நிலை ஆளுநர், உடனடியாக புனரமைப்புப் பணிகளை மேற்கொள்ள புதுச்சேரி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டா. பின்னர் அப்பகுதி மக்களிடமும் ஆளுநர் குறைகளைக் கேட்டறிந்தார்.
முதலமைச்சர் நாராயணசாமி, வெள்ளச் சேதத்தை பார்வையிடுவதற்கு முன்பாக துணை நிலை ஆளுநர் முதல்நபராக களத்தில் குதித்ததை புதுச்சேரி மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து, ஆர்ப்பரித்தனர்.
தமிழ் தெரிந்த ஆளுநர் ஒருவர், களத்தில் இறங்கி நகரின் கட்டமைப்பை பார்வையிட்டதுடன், புனரமைப்புப் பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளை முடுக்கிவிட்ட காட்சியைக் கண்டு பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர். துணை நிலை ஆளுநரின் அதிரடியாகல் புதுச்சேரி நகரம் விரைவில் சுகாதாரமிக்க பகுதியாக மாறிவிடும் என நம்பிக்கையுடன் கூறினார்.
கனமழை காரணமாக புதுச்சேரியில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
1 முதல் 9ஆம் வகுப்பு வரை விடுமுறை என புதுச்சேரி கல்வித்துறை அறிவித்துள்ளது.
புதுச்சேரியில் இன்று 19 சென்டிமீட்டர் மழை பதிவாகி உள்ளது.
களத்தில் இறங்கி புதுச்சேரி நகரையே சுற்றி வந்த துணை நிலை ஆளுநர், வெள்ளநீரை விரைவாக அகற்ற வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டதோடு மட்டுமல்லாமல், ஆளுநர் மாளிகைக்கு திரும்பிய உடனேயே, உயர் அதிகாரிகளுடன் வெள்ள நீர் பாதிப்பு மற்றும் நிவாரணப் பணிகள் குறித்து ஆலோசனை நடத்தினார். பொதுமக்களின் நிம்மதியையும், பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார் துணை நிலை ஆளுநர்.