தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களுக்கான துணை வேந்தர்களை நியமனம் செய்யும் அதிகாரத்தை ஆளுநரிடம் இருந்து பறித்து, தமிழக அரசே நியமனம் செய்யும் வகையிலான சட்ட முன்வடிவை உயர் கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி தாக்கல் செய்தார். அந்த சட்ட முன்வடிவை நிறைவேற்றித் தர வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் இன்று வேண்டுகோள் விடுத்தார்.
முதல்வரின் உரை இதோ….
சட்ட முன்வடிவு நிறைவேற்றம்….பாஜக+அதிமுக வெளிநடப்பு
துணை வேந்தர்களை மாநில அரசே நியமிக்க வழிவகை செய்யும் சட்டமுன்வடிவு சட்டப்பேரவையில் விவாதத்திற்குப் பின்பு நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த சட்ட முன்வடிவை எதிர்த்து பாஜக மற்றும் அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.