சட்டப்பேரவையில் இன்று தொழில்துறை மானிய கோரிக்கையை தாக்கல் செய்த அமைச்சர் தங்கம் தென்னரசு, பல்வேறு புதிய அறிவிப்புகளை வெளியிட்டு உரையாற்றினார்.
அமைச்சர் உரையில் இடம் பெற்ற முக்கிய அம்சங்கள்:
Greenfield Airport-க்கு இடம் தேர்வு செய்யப்பட்டு விட்டது; சென்னையில் எந்த இடத்தில் Greenfield Airport அமைய உள்ளது என்பது விரைவில் அறிவிக்கப்படும்.
முதலமைச்சர் மீது முதலீட்டாளர்கள் நம்பிக்கை கொண்டுள்ளனர்;
முதலீட்டுக்கு உகந்த மாநிலமாக தமிழ்நாட்டை உருவாக்குவதே இலக்கு.
தமிழ் நிலப்பரப்பின் எல்லா மாவட்டங்களிலும் சமச்சீரான முறையில் தொழில் முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளது.
தொழிற்துறையின் பெயர் மாற்றம்; தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு & வர்த்தகத்துறை என்று பெயர் மாற்றம்.
முதலீட்டு ஊக்குவிப்பு & எளிதாக்கல் ஆணையரகம் உருவாக்கப்படும்; விரிவான சாலை உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் சாலைகள் மேம்படுத்தப்படும்.
ஹைட்ரஜன் உற்பத்தித் துறையில் பெரியளவில் முதலீடுகளை ஊக்குவிக்கும் பொருட்டு, ஹைட்ரஜன் எரிசக்திக் கொள்கை வெளியிடப்படும்;
சுற்றுச்சூழல் தரத்தை மேம்படுத்த எத்தனால் கொள்கை 2022 வெளியிடப்படும்.
கிருஷ்ணகிரியில் புதிய சிப்காட் தொழிற் பூங்கா ரூ.1,800 கோடி மதிப்பில் 3,000 ஏக்கர் பரப்பில் உருவாக்கப்படும்;
தஞ்சாவூர் & உதகமண்டலத்தில் சுமார் ரூ.70 கோடி மதிப்பில் மினி டைடல் பூங்காக்கள் அமைக்கப்படும்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சுமார் ரூ.1,000 கோடி மதிப்பில் தொழிலக வீட்டுவசதி திட்டம் செயல்படுத்தப்படும்;
காஞ்சிபுரம் மாவட்டத்தில் சுமார் ரூ.500 கோடி மதிப்பில் பல்துறை தொழிற்பூங்கா, தனியார் பங்களிப்புடன் அமைக்கப்படும்.
தமிழ்நாட்டில் அதிவேக ரயில் வழித்தடத்தை அடையாளம் காண சாத்தியக்கூறு ஆய்வு சுமார் ரூ.3 கோடி செலவில் மேற்கொள்ளப்படும்;
சரக்கு போக்குவரத்துக்கான வழித்தடத்தை அடையாளம் காண சாத்தியக்கூறு ஆய்வு ரூ.3 கோடி செலவில் மேற்கொள்ளப்படும்.
வான்வெளி & பாதுகாப்பு தொழில்கள் தொடர்பாக ஒரு பொது வசதி மையம் ரூ.500 கோடி மதிப்பில் கோவையில் அமைக்கப்படும்;
கோவையில் பல்முனைய சரக்கு போக்குவரத்து பூங்கா ரூ.300 கோடியில் அமைக்கப்படும்.
முதல்வரிடம் வாழ்த்து..
பேரவையில் மானியக் கோரிக்கை தாக்கல் செய்வதற்கு முன்பாக தலைமைச் செயலகத்தில் இன்று காலை முதல்வர் மு.க.ஸ்டாலினைச் சந்தித்து தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு வாழ்த்துகளைப் பெற்றுக் கொண்டார்.