தேசிய அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்த கட்சியாக திமுக உள்ளது.
நாடாளுமன்றத்தில் 3வது பெரிய கட்சியாக உள்ளது.
நாட்டின் பிரதமர், குடியரசுத் தலைவர்களை தீர்மானிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது என பிடிஐ செய்தி நிறுவனத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேட்டியளித்த போது உறுதிபட தெரிவித்துள்ளார்..
மேலும் அவர் கூறியதாவது: தமிழ்நாட்டில் திமுகவுடன் இருப்பதை போல் அகில இந்திய கட்சிகளுடன் கொள்கை ரீதியாக நட்பை காங்கிரஸ் வளர்க்க வேண்டும்.
அனைவரும் தங்கள் தனிப்பட்ட அரசியலை ஒதுக்கிவிட்டு, இந்தியாவை காக்க ஒன்றுபட வேண்டும்;
அகில இந்திய அளவில் கொள்கை ரீதியாக அரசியல் கட்சிகளுடன் காங்கிரஸ் கூட்டணி உருவாக்க வேண்டும்.
பாஜகவை எதிர்க்கும் அனைத்து மாநில கட்சிகளும் காங்கிரஸ், இடதுசாரிகளுடன் கைகோர்த்து அணியை உருவாக்க வேண்டும்.
ஆளுநர் ஆர்.என்.ரவியுடன் நல்லுறவு நீடிக்கிறது;
ஆனால் நீட் விவகாரத்தில் ஆளுநர் முடிவெடுப்பதில் அதிக தாமதம் உள்ளது, அது சரியல்ல.
இவ்வாறு முதல்வர் மு. க. ஸ்டாலின் கூறியுள்ளார்.