Fri. Nov 22nd, 2024

சட்டப்பேரவை மீண்டும் ஏப்ரல் 6 ஆம் தேதி கூடுகிறது.

சென்னை தலைமைச் செயலகத்தில் பேரவைத் தலைவர் அப்பாவு இன்று நண்பகல் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

ஆண்டின் தொடக்கமான ஜனவரியில் சட்டப்பேரவை கூடியபோது, ஆளுநர் உரையாற்றினார். தொடர்ந்து மார்ச் மாதத்தில் நிதிநிலை அறிக்கை, வேளாண் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு அதன் மீதான விவாதங்கள் நடைபெற்றன.

தொடர்ந்து, துறை வாரியான மான்யக் கோரிக்கைகள் தாக்கல் செய்யப்பட வேண்டும். அதற்காக வரும் 6 ஆம் தேதி சட்டப்பேரவை மீண்டும் கூடுகிறது. மே மாதம் 10 ஆம் தேதி வரை சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் நடைபெறுகிறது.

நாள்தோறும் கேள்வி நேரம் எடுத்துக் கொள்ளப்படும். உறுப்பினர்களின் கேள்விகளும், அமைச்சர்களின் பதில்களும் நேரடியாக ஒளிப்பரப்பப்படும். தலைமைச் செயலகத்தில் உள்ள சட்டப்பேரவையை மேலும் விரிவாக்கம் செய்வதற்கான இடம் இல்லை. அதனால், இருக்கும் இடத்திற்கு ஏற்ப சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோருக்கு வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன.

பள்ளி, கல்லூரிகளில்தான் இடைவேளை விடப்படும். சட்டப்பேரவையில் அதுபோன்ற மரபு இல்லை. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் நல்ல உடல் ஆரோக்கியத்துடன்தான் இருக்கிறார்கள். அதனால், பேரவை நிகழ்வுகளின் போது இடையே ஓய்வுநேரத்திற்கு என்று தனியாக நேரம் ஒதுக்கப்படுவதில்லை.

இவ்வாறு பேரவைத்தலைவர் தெரிவித்தார். தொடர்ந்து தேதி வாரியாக தாக்கல் செய்யப்படவுள்ள துறைகளின் மான்யக் கோரிக்கை பற்றிய பட்டியலையும் சட்டப்பேரவைத் தலைவர் வெளியிட்டார்.

அதன் விவரம்: