Sat. May 18th, 2024

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:

மக்களின் தேவைகளை அதிமுக அரசு பூர்த்தி செய்து வருகிறது.

கூட்டுறவு வங்கிகளில் பயிர்க்கடன் தள்ளுபடி திட்டத்தின் மூலம் திமுகவினரே அதிகம் பயனடைந்திருக்கிறார்கள். அதனால், அவர்கள் அ.தி.மு.கவுக்கே வாக்களிக்க வேண்டும்.

அ.தி.மு.க ஜனநாயக இயக்கம், எதிர்காலத்தில் சாதாரண மனிதன்தான் முதலமைச்சராக வர முடியும்.

2019 நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக ஊர் ஊராக சென்று மு.க.ஸ்டாலின் வாங்கிய மனுக்களுக்கு என்ன தீர்வு கிடைத்தது?

கொரோனா ஊரடங்கு தொடர்பாக பதிவு செய்யப்பட்ட சுமார் 10 லட்சம் வழக்குகள் கைவிடப்படுகின்றன.

இதேபோல, குடியுரிமை திருத்தச் சட்ட எதிர்ப்பு போராட்டங்கள் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட சுமார் 1,500 வழக்குகளில், வன்முறை மற்றும் காவல்துறையினரை பணி செய்யவிடாமல் தடுத்தது தொடர்பானவை தவிர, எஞ்சிய வழக்குகள் கைவிடப்படுகின்றன.

கூடங்குளம் போராட்டக்காரர்கள் மீதான வழக்குகளை கைவிடுவது தொடர்பாக பரிசீலித்து நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.

தேர்தல் பிரசாரத்திற்கு இடையே முதல்வர் எடப்பாடி பழனிசாமியை, கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிரான போராட்ட வழக்குகளை திரும்பப் பெற வேண்டி, அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கத்தை சார்ந்த சுப.உதயகுமார், பீட்டர் மில்டன், கேபிஸ் டன் ஆகியோர் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.