Thu. Nov 21st, 2024

33 சதவிகித இடஒதுக்கீடு

மேற்கு வங்காள மாநிலத்தில் பெண்களுக்கு 33 சதவிகித இடஒதுக்கீடு வழங்கப்படும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். பர்கானாஸ் மாவட்டத்தில் பா.ஜ.க.வை ஆதரித்து தேர்தல் பிரசாரம் மேற்கொண்டபோது இதனை அவர் கூறினார்.

மம்தா பானர்ஜி கண்டனம்


மேற்கு வங்க மாநிலம் முர்ஷிதாபாத் மாவட்டம் நிம்திதா ரயில் நிலையத்தில் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் ஜாகிர் உசைன் மீது வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. படுகாயமடைந்த அவர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார். அவரை அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி சந்தித்து நலம் விசாரித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அசம்பாவிதம் நடந்த இடம் ரயில்வே துறைக்குச் சொந்தமானது. அதனால், உரிய விசாரணை நடத்தி உண்மையை வெளிக் கொண்டு வர வேண்டும் என்றும், அவரை கொல்ல சதித்திட்டம் தீட்டப்பட்டுள்ளதாக சந்தேகம் உள்ளதாக தெரிவித்தார்.

காஷ்மீரில் வெளிநாட்டு தூதர்கள்


ஜம்மு காஷ்மீரில் 2 வது நாளாக ஆய்வு மேற்கொண்டு வரும் வெளிநாட்டு தூதர்கள் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி பங்கஜ் மிட்டலை சந்தித்து காஷ்மீர் நிலவரம் குறித்து கேட்டறிந்தனர். அம்மாநிலத்தில் வளர்ச்சிப் பணிகள் குறித்து ஆய்வு செய்வதற்காக ஐரோப்பிய, ஆப்பிரிக்கா நாடுகளைச் சேர்ந்த தூதர்கள் கடந்த 17 ஆம் தேதி காஷ்மீர் வந்தனர்.