Sat. May 18th, 2024

தோல்வி பயத்தின் காரணமாக அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபடுவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை தேனாம்பேட்டை எஸ்ஐஇடி கல்லூரியில் உள்ள வாக்குச்சாவடியில் பொதுமக்களுடன் வரிசையில் நின்று வாக்களித்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின். அவருடன் அவரது மனைவி துர்கா ஸ்டாலினும் வரிசையில் நின்று ஜனநாயக கடமையை நிறைவேற்றினார்.

வாக்களித்த பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின். அப்போது அவர் கூறியதாவது
வாக்காளர்கள் அனைவரும் தவறாமல் ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டும் .

ராணுவம் வரக்கூடிய அளவிற்கு எந்த சம்பவமும் கோவையில் நடைபெறவில்லை

தோல்வி பயம் காரணமாகவே கோவையில் அதிமுகவினர் போராட்டம் நடத்துகின்றனர்.

ஆதாரத்துடன் தவறுகளை சுட்டிக்காட்டினால் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

பின்னர், திமுக தலைவர் முதல்வர் ஸ்டாலின் இன்று காலை சென்னை அண்ணா அறிவாலயத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி திமுக சார்பில் பிரத்யேகமாக அமைக்கப்பட்டு செயல்பட்டு வந்த war room யை பார்வையிட்டார்.

வாக்குப்பதிவு தொடர்பாக அங்கு பணியாற்றிய ஊழியர்கள் மேற்கொண்ட தகவல் திரட்டும் மறறும் கண்காணிப்பு பணிகளை மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார் இதை தொடந்து அங்கு வந்த தொலைபேசி அழைப்புகளை எடுத்து அவர்கள் கூறும் பிரச்சனைகளை கேட்டு அந்த பிரச்னைகளை சரி செய்ய திமுக நிர்வாகிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.

கனிமொழி கருணாநிதி வேண்டுகோள்..

திமுக மகளிரணி செயலாளரும் தூத்துக்குடி எம்.பி.யுமான கனிமொழி கருணாநிதி, தனது தாயார் ராஜாத்தியம்மாளுடன் சென்று ஜனநாயக கடமையை ஆற்றினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வெற்றிப் பெற்று கவுன்சிலராக பதவியேற்கும் பெண்கள், நேரடியாக களத்திற்கு வந்து மக்களை சந்தித்து பொதுச் சேவையை ஆற்ற வேண்டும். தயக்கமில்லாமல் தங்கள் ஜனநாயக கடமையை ஆற்றும் துணிச்சலை வகுத்துக் கொள்ள வேண்டும் என்றும் கனிமொழி எம்பி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அவரின் பேட்டி இதோ…..

சென்னை மாநகராட்சி 122 வது வார்டில் உள்ள பள்ளியில் திமுக இளைஞரணி செயலாளர் மற்றும் சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் மனைவி கிருத்திகா உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் வாக்களித்தனர்.