ஈரோடு மாவட்டத்தில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஆதரவாக முதல்வர் ஸ்டாலின் காணொலி மூலம் பிரசாரம் மேற்கொண்டார்..
அவரின் பேச்சு விவரம்:
தமிழ்நாட்டை இந்தியாவின் சிறந்த மாநிலமாக மாற்ற திமுக உழைத்து வருகிறது.
நீட் தேர்வை திமுக, காங். கொண்டு வந்ததாக அதிமுக தொடர்ந்து பொய் குற்றச்சாட்டு சுமத்தி வருகிறது.
நீட் தேர்வை ஜெயலலிதா எதிர்த்தாலும், ஈபிஎஸ் ஆட்சிக்கு வந்த பிறகே தமிழகத்தில் அமலுக்கு வந்தது.
தமிழகத்தில் நீட் தேர்வு அதிமுக ஆட்சியில்தான் வந்தது; இதை ஆதாரங்களுடன் நிரூபிக்க தயார்
நீட் தேர்வு குறித்து விவாதிக்க தயாரா? – எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு சவால் விடுகிறேன்.
தமிழகத்தில் இனி நிரந்தரமாக திமுக ஆட்சிதான் என்ற நிலை உருவாகும்
நான் நிரந்தர முதல்வராக வேண்டும் என்பதற்காக அல்ல; திமுக தமிழர்களின் உணர்வோடு உருவான இயக்கம் என்பதற்காகதான் கூறுகிறேன்.
மக்களால் தோற்கடிக்கப்பட்ட பழனிசாமி, பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை போன்ற அநியாயங்களை மறைக்கவும், தானும் தன் அமைச்சர்களும் செய்த ஊழல்களை மறைக்கவும் தினமும் பொய் சொல்லி வருகிறார்.
இவர் பொய் சொல்லுகிற குணத்தை பார்த்து, பச்சை பொய் சொல்லும் பழனிசாமி என மக்களே சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள்; பொய் சொல்லுவதில் டாக்டர் பட்டம் வாங்கும் அளவுக்கு மக்களிடம் பொய் சொன்னவர்தான் இந்த பழனிசாமி .இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.