Sun. May 19th, 2024

புதிய தொழில் கொள்கை மற்றும் குறு,சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான தொழில் கொள்கை குறிப்பேட்டை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார்.

சென்னையில் நடைபெற்ற அரசு நிகழ்வில், 33,456 கோடி ரூபாய் முதலீட்டில் 46 திட்டப்பணிகளையும் முதல்வர் தொடங்கி வைத்தார்.
நிகழ்வில் முதல்வர் பேசியதாவது:

சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களை மீட்டெடுக்க உரிய ந்வடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மணப்பாறை உள்ளிட்ட இடங்களில் 10 புதிய தொழிற் பூங்காகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது.. 

அடுத்த நான்காண்டுகளில் 10 லட்சம் கோடி ரூபாய் முதலீடுகளை ஈர்த்து 20 லட்சம் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கிட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
புதிய குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்காக தொழில் கொள்கை குறிப்பேட்டையும் முதலமைச்சர் வெளியிட்டார்.
28 ஆயிரம் கோடி ருபாய் முதலீட்டில் தொழில் தொடங்குவதற்காக 28 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தமும் கையெழுத்திடப்பட்டது.
சிப்காட் நிறுவனத்தின் 4 புதிய தொழிற்பேட்டைகள் உருவாக்கவும், தமிழ்நாடு சிட்கோ நிறுவனத்தின் 6 புதிய தொழிற்பேட்டைகள் உருவாக்கவும் அடிக்கல் நாட்டப்பட்டது.

இவ்வாறு முதல்வர் கூறினார்.