Sun. Apr 20th, 2025

அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும் எதிர்க்கட்சித்தலைவருமான எடப்பாடி பழனிசாமி சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

மக்களை திசை திருப்புவதற்காகவே லஞ்ச ஒழிப்புத் துறையினரை பயன்படுத்தி சோதனை நாடகம் அரங்கேற்றப்படுகிறது.

திமுக ஆட்சியில் வழங்கப்பட்ட பொங்கல் தொகுப்பில் ரூ.500 கோடி வரை ஊழல் நடந்துள்ளது.

தரமற்ற பொருட்கள் வழங்கப்பட்டதால் தமிழக மக்கள் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாட முடியவில்லை. கொரோனா வைரஸை கட்டுப்படுத்த திமுக அரசு தவறிவிட்டது.

போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தாத காரணத்தால் தொற்று எண்ணிக்கை 40 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரை அதிகரித்துள்ளது.

கடந்த 8 மாத காலத்தில் திமுக எந்த ஒரு திட்டத்தையும் நிறைவேற்றவில்லை.

அதிமுக ஆட்சி காலத்தில் நிறைவேற்றப்பட்ட திட்டங்களைதான் முதலமைச்சர் தொடங்கி வைக்கிறார்.

இவ்வாறு சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்..