கொரோனா பரவல் அதிகரிப்பு- மு.க.ஸ்டாலின் ஆலோசனை
சென்னை கலைவாணர் அரங்கத்தில் முதல்வர் மு. க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், மருத்துவ நிபுணர்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. நேற்று ஒருநாள் பாதிப்பு ஆயிரம் உயர்ந்து, புதிதாக 2,731 பேருக்கு தொற்று உறுதியானது. சென்னையில் நேற்றுமுன்தினம் 876 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் நேற்று இது 1,489 ஆக அதிகரித்துள்ளது.
இதையடுத்து கொரோனா பரவல் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனையில் ஈடுபட்டார்.
இந்த ஆலோசனை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து சுகாதார அமைச்சர் மா. சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் பேசினார்..அப்போது அவர், தமிழகத்தில் ஞாயிறுக்கிழமை முழு ஊரடங்கு அமலில் இருக்கும் என்று கூறினார்..
மேலும், ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமலில் இருக்கும் என்பதால் சனிக்கிழமை அன்று மெகா தடுப்பூசி முகாம் நடைபெறும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்..
இதனைத்தொடர்ந்து, தமிழகத்தில் நாளை முதல் இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக முதல்வர் மு. க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்..