Sat. Nov 23rd, 2024

மத்திய அரசு பிறப்பித்துள்ள உத்தரவின்படி, அரசுப் பணியில் உள்ள அனைவரும் தங்களது அசையும் மற்றும் அசையா சொத்து விவரம் மற்றும் அவரவர் குடும்பத்தினரின் சொத்து விவரங்களையும் அறிக்கையாக அரசுக்கு ஆண்டுதோறும் தாக்கல் செய்ய வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.

அதன்படி, தமிழ்நாடு அரசில் பணி புரியும் ஐஏஎஸ் அதிகாரிகளும், தங்களது அசையும் சொத்துகள் மற்றும் அசையா சொத்துகள் உள்ளிட்டவற்றை குறித்து வரும் ஜனவரி 31 ஆம் தேதிக்குள் அரசிடம் தாக்கல் செய்ய வேண்டும் என தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு ஐஏஎஸ் உத்தரவிட்டுள்ளார். 2021 ஆம் ஆண்டிற்கான சொத்து விவரங்களையும் உள்ளடக்கிய முழுமையான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளார்.

ஐஏஎஸ் அதிகாரிகள் அனைவரும் தங்கள் பெயரிலும், தங்களுடைய குடும்பத்தினர் மற்றும் பிற நபர்கள் பெயரிலும் உள்ள தங்களுக்கு சொந்தமான அசையாத சொத்து விவரங்களை, இணைய வழியாக தாக்கல் செய்ய வேண்டும் என்றும் தலைமைச் செயலாளர் தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.

சரியான காரணமின்றி சொத்து விவரங்களை தெரிவிக்காமல் இருக்கும் ஐஏஎஸ் அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

ஜனவரி 31ம் தேதிக்குள்ளாக சொத்து விவரங்களை ஆன்லைன் மூலமாக பதிவு செய்ய வேண்டும் என்றும் தனது உத்தரவில் தலைமைச் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.