Sun. Apr 20th, 2025

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் பேருந்து நிலையத்தில், மீன் விற்பனையில் ஈடுபட்டு வரும் மூதாட்டியிடம் இருந்து நாற்றம் வீசுவதாக கூறி பேருந்தில் இருந்து அரசு நடத்துநர், ஓட்டுநர் ஆகியோர் இறக்கி விட்ட நிகழ்வு, மாநிலம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதனையடுத்து, இரண்டு பணியாளர்களையும் தற்காலிக பணி நீக்கம் செய்து போக்குவரத்து துறை உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக, குமரி மாவட்ட அமைச்சர் மனோ தங்கராஜ் வெளியிட்டுள்ள செய்தி இதோ….

அரசு பேருந்து நடத்துனர் மற்றும் ஓட்டுநர் ஆகியோரின் மனிதாபிமானமற்ற செயலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அதன் விவரம் இதோ...