Sat. Apr 19th, 2025

தமிழக ம் முழுவதும் நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகள் குறித்து ஒரு வாரத்திற்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அரசுக்கு உத்தரவிட்டது..

இதனையடுத்து தலைமை செயலாளர் வெ. இறையன்பு ஐஏஎஸ் இன்று தலைமைச் செயலகத்தில் நீர்வளம், பொதுப் பணி உள்ளிட்ட உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்..தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் களுடன் காணொளி வாயிலாக கலந்து உரையாடினார்.. அப்போது தலைமைச் செயலாளர் ர், நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை கணக்கெடுப்பு செய்து வரும் 4ம் தேதிக்குள் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்..

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட உத்தரவில் எவ்வித சுணக்கமும் காட்டாமல் கணக்கெடுப்பு நடத்தி, தெளிவான அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் எனவும் தலைமை செயலாளர் வெ. இறையன்பு ஐஏஎஸ் அறிவுரை வழங்கியுள்ளார்..

One thought on “நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகள் கணக்கெடுக்கும் பணி: தலைமைச் செயலாளர் எச்சரிக்கை…”

Comments are closed.