Fri. Apr 18th, 2025

முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காலை சென்னையையொட்டியுள்ள செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் வெள்ளத்தால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இரு மாவட்டங்களிலும் மேற்கொள்ளப்பட்டு வரும் வெள்ள வடிகால், மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை ஊரக வளர்ச்சித்துறை செயலாளர் அமுதா ஐஏஎஸ், முதல்வரிடம் விரிவாக எடுத்துரைத்தார்.

இரண்டு மாவட்டங்களிலும் தொடர் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்குவதற்கான முகாம்களை அமைச்சர் தா.மோ.அன்பரசன் ஏற்பாடு செய்திருந்தார். அங்கிருந்த எண்ணற்ற மக்களுக்கு முதல்வர் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.