Fri. Nov 22nd, 2024

தேசிய நெடுஞ்சாலைகளில் பயணம் செய்யும் வாகனங்களுக்கு இன்று முதல் பாஸ்டேக் கட்டயமாக்கப்பட்டுள்ளது. பாஸ்டேக் வசதி இல்லையென்றால், சுங்குச்சாவடிகளில் இரண்டு மடங்கு கட்டணம் வசூலிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் கட்டணம் செலுத்தி வாகனங்கள் சென்று வந்தன. இதனால், அதிக நேரம் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை உருவாவதால், பாஸ்டேக் எனும் புதிய வசதியை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது.

இந்த குறையை போக்க, கடந்த 2016-ம் ஆண்டு பாஸ்டேக் என்ற முறையை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. அதன் மூலம் முன்கூட்டியே பணம் செலுத்தி சென்ஸார் அட்டையை பெற்று வாகனங்களில் பொருத்தி, உரிமையாளர்கள் பயன்படுத்தத் தொடங்கினர்.

இந்த வசதி மூலம், சுங்கசாவடிகளில். வாகனம் நீண்ட நேரம் நிற்க வேண்டிய தேவை ஏற்படவில்லை. வாகனங்கள் விரைவாக சுங்கச்சாவடியை கடந்து சென்றன. அனைத்து வாகனங்களும் இந்த நடைமுறைக்குள் இன்னும் வராத காரணத்தால், நள்ளிரவில் இருந்து பாஸ்டேக் கட்டாயம் என அரசு அறிவித்துள்ளது.

பாஸ்டேக் வசதி இல்லாமலோ, செல்லுபடியாகாமலோ இருந்தால் இரண்டு மடங்கு கட்டணம் வசூலிக்கப்படும் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி அறிவித்துள்ளார்.