Fri. Nov 1st, 2024

விவசாயிகள் தங்கள் போராட்டங்களைத் திரும்பப் பெற வேண்டும்.போராட்டம் செய்து வரும் விவசாயிகள் வீடுகளுக்கு செல்லுமாறு பிரதமர் மோடி வேண்டுகோள்.

இந்த மாதம் தொடங்க உள்ள நாடாளுமன்ற கூட்டத்தொடரில் முறைப்படி 3 வேளாண் சட்டங்களும் திரும்பப்பெறப்படும் என பிரதமர் உறுதியளித்துள்ளார்..

காணொளி வாயிலாக நாட்டு மக்களிடையே பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை உரையாற்றினார்..அப்போது அவர் கூறியதாவது:

நாட்டு மக்களின் கனவுகளை நனவாக்க பாடுபடுகிறோம்; விவசாயிகளின் பிரச்னைகளை அருகிலிருந்து பார்த்து உணர்ந்து வருகிறேன்.

நம் நாட்டில் 100 விவசாயிகளில் 80 பேர் சிறு விவசாயிகள், 2 ஏக்கருக்கும் குறைவான நிலமே அவர்களிடம் உள்ளது.

விவசாயிகளின் பிரச்னைகளை தீர்க்க 2014ஆம் ஆண்டிலிருந்து நடவடிக்கை எடுத்து வருகிறோம்; வேளாண் உற்பத்தியை அதிகரித்துள்ளோம்.

வேளாண் விலை பொருட்களுக்கு உரிய விலை கிடைப்பதை உறுதி செய்துள்ளோம்; விவசாயிகள் நலன் சார்ந்த நடவடிக்கைகள் கடந்த காலத்தில் 5 மடங்கு அதிகரித்துள்ளது.

3 புதிய வேளாண் சட்டங்கள் நாட்டின் சிறு, குறு விவசாயிகளின் நலனுக்காகவே கொண்டுவரப்பட்டது.

இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார்