Sun. May 5th, 2024


ஹிந்து சமய அறநிலையத்துறை சார்பில் புதிதாக கல்லூரிகள் துவங்க கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் ஹிந்து சமய அறநிலையத் துறை சார்பாக கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் துவங்கப்படும் என்று சட்டசபையில் அறிவிக்கப்பட்டது. இதில் 4 கல்லூரிகள் துவங்கப்பட்டு நடப்பாண்டே மாணவர் சேர்க்கையும் துவங்கியது.

கோவில் நிதியில் கல்லூரி துவங்க தடை கோரி டி.ஆர்.ரமேஷ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கின் விசாரணை இன்று (நவ.,15) நடைபெற்றது.

அப்போது நீதிபதிகள் கூறுகையில், ‘ஹிந்து சமய அறநிலையத்துறை சார்பில் புதிதாக கல்லூரிகள் துவங்க கூடாது. ஏற்கனவே துவங்கிய கல்லூரிகளின் செயல்பாடு வழக்கின் இறுதி தீர்ப்புக்கு கட்டுப்பட்டது. அறங்காவலர் இல்லாமல் நீதிமன்ற அனுமதி இல்லாமல் கூடுதல் கல்லூரிகள் துவங்க நடவடிக்கை எடுக்க கூடாது. கல்லூரி துவங்கிய ஒரு மாதத்திற்குள் ஹிந்து மத வகுப்புகள் நடத்தாவிட்டால், கல்லூரிகளை தொடர்ந்து நடத்த முடியாது,’ எனக் கூறி இந்த வழக்கு தொடர்பாக பதிலளிக்க தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும் இந்த வழக்கை 5 வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.